48எம்பி கேமராவுடன் விவோ Y70s ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!


விவோ நிறுவனம் தனது Y70S ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த கேமரா வசதி மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

விவோ Y70s ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Advertisement

இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 880சிப்செட் வசதியுடன் மாலி ஜி76 எம்பி5 ஜிபியு ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ Y70s ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ISRO ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நிலவு மண்ணிற்கு காப்புரிமை! பலே தமிழா!

விவோ Y70s ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கைநுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y70s ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விவோ Y70s ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Realme X50 Pro பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

5 ஜி, டூயல் சிம் 4 ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீஆடியோ ஜாக்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்ஆரம்ப விலை 1998 Yuanஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English Summary

Vivo Y70s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot