VIVO நீ வேற லெவல்.. அடேங்கப்பா ஆபர் விலையில் புது 5ஜி போன்.. 200MP OIS கேமரா, 90W சார்ஜிங், 7000mAh பேட்டரி!
விவோ (Vivo) நிறுவனம் ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று, அதன் விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அறிமுக ஆபர் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது. என்ன விலை, என்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
விவோ வி70 எப்இ ஸ்மாட்போனில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை விவோ நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. அதாவது - 200 மெகாபிக்சல் ரியர் கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 7000mAh பேட்டரி மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83-இன்ச் 1.5K ஓஎல்இடி டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்களோடு சேர்த்து விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது மான்சூன் ப்ளூ மற்றும் நார்தர்ன் லைட்ஸ் பர்ப்பிள் ஆகிய கலர்களில் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டார்க்னஸ் க்ளோ டெக்னாலஜி (Darkness Glow Technology) இடம்பெறும். இது புற ஊதா ஒளி அல்லது சூரிய ஒளி (UV light or sunlight) பட்ட பிறகு, குறைந்த வெளிச்சத்தில் பேக் பேனலை மென்மையாக ஒளிர செய்யும்.
விவோ வி70 எப்இ என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விவோ நிறுவனம் அதன் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனை ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் விவோ இந்தியா இணையதளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விலையை பொறுத்தவரை விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என்கிற 2 வேரியண்ட்டுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.35,000 க்கு கீழ் தொடங்கும் என்றும், பேஸிக் மாடலின் விலை ஆனது அறிமுக சலுகைகள் (வங்கி சலுகைகள்) உட்பட சுமார் ரூ.30,000 ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்களை (IP68 and IP69 Ratings) கொண்டிருக்கும் மற்றும் நீருக்கடியில் புகைப்படம் (Underwater photography) எடுப்பதை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் வரை ப்ரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், 449 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் HDR10+ சான்றிதழுடன் கூடிய 6.83-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்லாம்.
இந்த போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 6 கொண்டு இயங்கலாம். இதில் ஆரிஜின் ஐலேண்ட் அம்சம் இடம்பெறும், இது முன்பக்க கேமரா பகுதியை சுற்றி நிகழ்நேர எச்சரிக்கைகளையும், அறிவிப்புகளையும் காண்பிக்கும். விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, விவோ வி70 எப்இ மாடலில் அல்ட்ரா ஹை ரெசல்யூஷன் 1/1.56-இன்ச் சென்சாரை உள்ளடக்கிய கொண்ட 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா கொண்டிருக்கும். இது CIPA 4.0 அல்ட்ரா ஸ்டெபிலைசேஷனுடன், விவோவால் உருவாக்கப்பட்ட OIS அமைப்பை பயன்படுத்தும். ரியர் கேமரா செட்டப்பில், ஆரா லைட் ஆதரவுடன் 120 டிகிரி பாயிண்ட் ஆப் வியூ கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் இடம்பெறும்.
செல்பீகளுக்காக, எப்/2.2 அபெர்ச்சர் மற்றும் 92 டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 50 மெகாபிக்சல் முன்பாக கேமரா இடம்பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் AI மேஜிக் வெதர், AI மேஜிக் லேண்ட்ஸ்கேப் மற்றும் AI ஃபோர்-சீசன் போர்ட்ரெய்ட் ஆகிய கேமரா அம்சங்களும் இடம்பெறலாம். இது டெலிஃபோட்டோ மேம்பாட்டுடன் கூடிய AI-பவர்டு 30x சூப்பர் ஜூமையும் ஆதரிக்கலாம்.
பேட்டரியை பொறுத்தவரை விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட 7000mAh பேட்டரி இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போனை 60 நிமிடங்களில் 1 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று விவோ நிறுவனம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications








