ஏப்ரல் 10: சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும்.


தென்கொரியா நிறுவனமான சாம்சங் வரும் ஏப்ரல் 10-ம் தேதி தனது கேலக்ஸி ஏ90 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் டூயல் ரியர் கேமரா அம்சம் மற்றும்
செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

முந்தைய கேலக்ஸி ஏ10, ஏ30 மற்றும் ஏ50 ஸ்மார்ட்போன்களை விட கேலக்ஸி ஏ90 சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்றும், பின்பு இதன் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.41-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 1080 பிக்சல் திர்மானம்,19:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்கள்
இதில் இடம்பெற்றுள்ளது.

சிப்செட்:

கேலக்ஸி ஏ90 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தில் பின்புறத்தில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

கேமரா-பேட்டரி:

சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இதனுள் அடக்கம். அதேபோல் டூயல் ரியர் கேமரா மற்றும் ஏஐ சார்ந்த செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English Summary

Samsung may launch Galaxy A90 on April 10 : Read more about this in Tamil GizBot