சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்20,கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10அப்டேட் கிடைத்துள்ளது, கண்டிப்பாக இந்த புதிய அப்டேட் சாம்சங் பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Advertisement

கேலக்ஸி எம்30 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Advertisement
கேலக்ஸி எம்30 சேமிப்பு

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு": பாஜக எம்.பி.,

கேலக்ஸி எம்30 பேட்டரி

இந்த கேலக்ஸி எம்30 சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்
மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எம்20 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. கேலக்ஸி எம்20 சாதனத்தில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவும் இவற்றில் உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி எம்20 சிப்செட்

இக்கருவி ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் உடன் மாலி-ஜி71 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English Summary

Samsung Galaxy M20, Galaxy M30 reportedly get Android 10 update in India : Read more about this in Tamil GizBot