சியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்!


சியோமி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த பட்ஜெட் விலை குவாட் கேமரா ஸ்மார்ட்போன் மாடல் தான் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன். சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி முதல் அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Advertisement

புதிய ரெட்மி நோட் 8

கடந்த மாதம் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் இந்த புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் மற்றும் 4000 எம்.ஏ.எச் கொண்ட பேட்டரி உடன் களமிறக்கப்பட்டுள்ளது.

Advertisement
டபுள் டேட்டா சலுகை

இந்த புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன், இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த விற்பனையில் இந்த போனுடன் ஏர்டெல்லின் டபுள் டேட்டா சலுகை ரூ.249 மற்றும் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உடன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா?

சலுகை விபரம்

இத்துடன் 10% உடனடி கேஷ்பேக் சலுகையாக ரூ.500 வரை எச்.டி.எப்.சி டெபிட் கார்டுகளுக்கும், 5% உடனடி கேஷ்பேக் சலுகையாக எச்.எப்.பி.சி கார்டுகளுக்கும் மற்றும் 5% உடனடி கேஷ்பேக் சலுகையாக ரூ.1500 வரை ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. கூடுதலாக Mi.com தலத்தில் ரெட்மி நோட் 8 வாங்கினால் 1120ஜிபி ஏர்டெல் டேட்டாவையும் வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?

ரெட்மி நோட் 8 சிறப்பம்சங்கள்
  • 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • MIUI 10 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
  • 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்
  • 64 ஜிபி முதல் 128 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பு
  • பின்பக்க குவாட் கேமரா அமைப்பு
  • 48 மெகா பிக்சல் கேமரா, 8 மெகா பிக்சல் கேமரா, 2 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமரா
  • 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
  • நிறம்: மூன்லைட் வைட், நெப்டியூன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக்


Best Mobiles in India

English Summary

Redmi Note 8 to Go on Sale in India at 12pm Today via Amazon India : Read more about this in Tamil GizBot