பட்ஜெட் விலையில் Redmi k30i: இதுவரை ரெட்மியில் இல்லாத அம்சம் ஒன்று இருக்கு!


ரெட்மி கே 30 ஐ ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு, 765 ஜி SoC, 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்களோடு பட்ஜெட் விலை போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

Advertisement

ஸ்னாப்டிராகன் 765 ஜி

சியோமி நிறுவனம் இதுவரை இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 765 ஜி மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ரெட்மி கே30 ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதன் மூலம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கலாம்.

Advertisement
6.67 இன்ச், 20: 9 அளவிலான டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 5ஜி ப்ராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச், 20: 9 அளவிலான டிஸ்ப்ளே விகிதத்துடன் வருகிறது.

ஒரு வினாடியில் 1000 திரைப்படம் டவுன்லோட் செய்யலாம் - புதிய அதிவேக இன்டர்நெட்!

டூயல் ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு

இது டூயல் ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு மற்றும் வளைந்த விளிம்புகளோடு, புல் HD+ (1080 × 2400 பிக்சல்கள்) உடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன்

ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 10 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

பிற சிறப்பம்சங்கள்

வைபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் / குளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம்3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. இது க்வால்காம் புதிய ஸ்னாப்டிராகன் 765 SoC மூலம் இயக்கப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை 1999யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,290) ஆக இருக்கலாம்.

கேமரா வடிவமைப்பு

ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி லென்ஸ் + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+2 எம்பி டெப்த் சென்சார்+ 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளது. மேலும் 20எம்பி +2எம்பி டூயல் செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்ப வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

யூடியூப் பார்த்து பைக் திருடிய நபர்? வாக்குமூலம்.! சிக்கியது எப்படி?

ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன்

வெளிவந்த ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது நீலம், சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் வெளிவந்துள்ளது. இதில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்றே கூறலாம். மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English Summary

Redmi k30i launched with 765 soc, 48 mp camera, 6gb ram price and specification