டிசம்பர் 17 வரை காத்திருங்கள்: ரெட்மி 9 பவர் 48 எம்பி கேமராவுடன் அறிமுகம்!
ரெட்மி 9 பவர் டிசம்பர் 17 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 தொடரில் மற்றொரு புதிய மாடல்
ரெட்மி 9 தொடர்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதன்படி தற்போது ரெட்மி 9 தொடரில் மற்றொரு புதிய மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. ரெட்மி 9 பவர் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம்
ரெட்மி 9 பவர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தேதியை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ரெட்மி 9 பவர் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. சீனாவில் ரெட்மி நோட் 9 4ஜி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அதன் மறுபெயரிட்ட பதிப்பாக ரெட்மி நோட் 9 பவர் அறிமுகமாகவுள்ளது.

வேகமான சார்ஜிங் அம்சம்
ரெட்மி 9 பவர் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஆன்லைன் நிகழ்வு மூலம் தொடங்கப்பட உள்ளது. இதை நிறுவனத்தின் டுவிட்டர் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் வேகமான சார்ஜிங் அம்சத்துடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி சேமிப்பு வசதி
இதுகுறித்து வெளிவந்த தகவலின்படி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

6.53-இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதிகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

6000 எம்ஏஏச் பேட்டரி
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
file images


Click it and Unblock the Notifications








