Realme XT ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்!


ரியல்மி 3ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராயட்டு 10 அப்டேட் வழங்கப்பட்ட பிறகு, தற்சமயம் ரியல்மி எகஸ்டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ வழங்கத் துவங்கியுள்ளது ரியல்மி நிறுவனம். எனவே இந்த புதிய அப்டேட் ரியல்மி எக்ஸ்டி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Advertisement

குறிப்பாக ரியல்மி எக்ஸ்டி வடிவமைப்பு மற்றும் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Advertisement

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்தஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறப்பாக ஹைப்பர்போலா லைட் எஃபெக்டுடன் புதிய ஐடி வடிவமைப்பை பெறும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ரியல்மி எக்ஸ்டி சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Advertisement

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சவுண்ட் சிஸ்டம் உறுதி செய்யும் வகையில் டால்பி அட்மோஸ் ஆதரவுகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

Advertisement

English Summary

Realme XT starts receiving Android 10 update With Realme UI in India : Read more about this in Tamil GizBot