Home
Mobile

ப்பா.. பட்ஜெட் PRICE-ல என்னா காம்பினேஷன்.. 7000mAh பேட்டரி, IP64 ரேட்டிங்.. Realme-யின் புது 5ஜி போன்!

ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் கீழ் 2 புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை, தாய்லாந்து சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அவைகள் ரியல்மி சி100 5ஜி (Realme C100 5G) மற்றும் ரியல்மி சி100ஐ (Realme C100i) மாடல்கள் ஆகும்.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையிலும் அதன் ரியல்மி சி-சீரிஸின் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதால், தாய்லாந்து அறிமுகத்திற்கு பின்னர் ரியல்மி சி100 5ஜி மற்றும் ரியல்மி சி100ஐ மாடல்கள் இங்கேயும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதால், இவ்விரு மாடல்கள் மீது ஒரு கண் வைப்பது நல்லது.

7000mAh பேட்டரி, IP64 ரேட்டிங்.. Realme-யின் புது 5ஜி போன்!

ரியல்மி சி100 5ஜி, ரியல்மி சி100ஐ என்ன விலைக்கு வரலாம்? ஐபோன்.ராய்டு.நெட் வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின் படி, ரியல்மி சி100 5ஜி மற்றும் ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்படலாம். வெளியீட்டிற்கு முன்னதாக, ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தாய்லாந்து விற்பனையாளரான பனானாவில் (BaNANA) பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.20,100 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.21,500 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ரியல்மி சி100 5ஜி, ரியல்மி சி100ஐ என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம்? ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 900 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், ரியல்மி சி100ஐ மாடலும் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 900 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் கொண்ட 6.8-இன்ச் எல்சிடி பேனலை கொண்டிருக்கும், ஆனால் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் என்று கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி சி100 5ஜி ஆனது 6என்எம் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ கொண்டு இயங்கும் என்றும், 48 மாதங்கள் வரை சீரான செயல்திறனை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உடன் பட்டியலிடப்பட்டு உள்ளது. ரியல்மி சி100 5ஜி மற்றும் ரியல்மி சி100ஐ ஆகிய இரண்டு மாடல்களிலும் 7000mAh பேட்டரி பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ரியல்மி சி100 5ஜி மாடல் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும், ரியல்மி சி100ஐ மாடல் 15W சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் யுஎஸ்பி டைப்-C போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவைகள் உள்ளன. ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 360 டிகிரி ட்ராப் ப்ரொடெக்ஷன் மற்றும் ராணுவ தரத்திலான நீடித்துழைக்கும் தன்மையை வழங்கும் என்று கூறப்படுகிறது.

மறுகையில் உள்ள ரியல்மி சி100ஐ மாடலில் ஆர்மர்ஷெல் பாதுகாப்பு, MIL-STD 810H சான்றிதழ் மற்றும் ஈரமான கைகளால் கூட பயன்படுத்த அனுமதிக்கும் வெட் ஹேண்ட் டச் 2.0 ஆதரவு ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2 ஸ்மார்ட்போன்களுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C100 5G With 7000mAh Battery Tipped to Launch on April 3 Specifications Price leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X