Home
Mobile

தலைவன் வேற ரகம்.. 8000mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஓப்போ பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களுடன் ஓப்போ கே15 ப்ரோ+ (OPPO K15 Pro+) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 8000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, IP69 ரேட்டிங் உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் பிரீமியம் கேமிங் மாடலாக இந்த ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. லேன்யிங் பிரீத்திங் லைட் (LanYing Breathing Light) மற்றும் கஸ்டமைசபிள் கேமரா ஃபிரேம் போன்ற டிசைன் தொடங்கி பிரீமியம் மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் சூப்பர் ஷாக்-ரெசிஸ்டன்ஸ் கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் வரையில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

தலைவன் வேற ரகம்.. 8000mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா!

மேலும், ஸ்விப்ட் கூலிங் என்ஜின் (Swift Cooling Engine), ஹேண்ட்ஹீல்டு கைரோஸ்கோப் (Handheld Gyroscope), லிங்ஸி பட்டன் (Lingxi Button) உள்ளிட்ட ஹார்ட்வேர் லெவல் கேமிங் பீச்சர்களும் இந்த ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டு உள்ளது. 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிண்ட் (3D Ultrasonic Fingerprint) கொண்ட டிஸ்பிளே உள்ளது.

இதில் வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch), க்ளோவ் மோட் (Glove Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ போர்ட்ராய்டு லைட்டனிங் (AI Portrait Lighting), ஏஐ எலிமினேஷன் (AI Elimination), லைவ் ஸ்லோவ் மோஷன் (Live Slow Motion) உள்ளிட்ட கேமரா பீச்சர்களையும் கொண்டுள்ளது. இப்போது, இந்த ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ கே15 ப்ரோ+ அம்சங்கள் (OPPO K15 Pro+ Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் 3என்எம் (Octa Core Dimensity 9500s 3nm) சிப்செட்டை இந்த ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி925 எம்சி12 ஜிபியு (Arm Mali G925 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

தலைவன் வேற ரகம்.. 8000mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா!

மேலும், கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. மேலும், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 330Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா மற்றும் 1080p 60fps வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 8.25 எம்எம் தடிமன் கொண்டுள்ளது.

213 கிராம் எடை வருகிறது. ஏனென்றால், 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போன் இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.50,146ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.56,912ஆக இருக்கிறது.

சீனாவின் யுவான் அடிப்படையில் இந்த விலைகள் இருக்கின்றன. ஏப்ரல் 3 ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. குளோபல் வெளியீட்டின் போது இந்திய வெளியீடு குறித்து தெரியவரும். போட்டோடஸ்ட் (Photodust), ஓர்ஜின் கிரே (Origin Grays) மற்றும் சைபர் விங்க்ஸ் (Cyber ​​Wings) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K15 Pro Plus With 8000mAh Battery 100W Fast Charging 50MP Camera Launched Sale From April 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X