Home
Mobile

அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. சோனி கேமரா.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ கே14 பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 8000எம்ஏஎச் பேட்டரி, ஐபி69கே ரேட்டிங், AMOLED டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது ஒப்போ கே14 பிளஸ் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ கே14 பிளஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14 Plus 5G Specifications): 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2772 × 1272 பிக்சல்ஸ், டிசி டிம்மிங் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் பிராசஸர் (MediaTek Dimensity 7360 Max processor) உடன் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த புதிய ஒப்போ போனில். அதேபோல் இந்த புதிய ஒப்போ போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

50எம்பி Smartsense SC532HS சென்சார் + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ்480 கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன.

ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போன் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விற்பனைக்கு வரும். IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் உடன் இந்த புதிய ஒப்போ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு ஒப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, குளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஸ்டார் ஒயிட் மற்றும் சோலார் ஆரஞ்சு நிறங்களில் இந்த புதிய ஒப்போன் வாங்க கிடைக்கும். குறிப்பாக ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போனின் எடை 207 கிராம் ஆகும்.

அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒப்போ கே14 பிளஸ் 5ஜி விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே14 பிளஸ் 5ஜி மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே14 பிளஸ் 5ஜி மாடலின் விலை ரூ.32,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே14 பிளஸ் 5ஜி மாடலின் விலை ரூ.35,999-ஆக உள்ளது.

வரும் அக்டோபர் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர் மூலம் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போனை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO K14 Plus 5G with 8000mAh battery launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X