Home
Mobile

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.12,349 க்கு வந்த 6500mAh பேட்டரி OPPO போன்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

6500mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, 13 எம்பி ஆட்டே போகஸ் கேமரா மட்டுமல்லாமல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 மொபைல் சிப்செட் கொண்ட மாடலாக வெளியாகிய ஓப்போ ஏ6எக்ஸ் 4ஜி (OPPO A6x 4G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.650 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,349 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை கொடுக்கிறது என்பதை பார்க்கலாம்.

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.12,349 க்கு வந்த 6500mAh பேட்டரி OPPO போன்!

ஓப்போ ஏ6எக்ஸ் 4ஜி அம்சங்கள் (OPPO A6x 4G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 மொபைல் (Qualcomm Snapdragon 685 Mobile) சிப்செட்டை இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 16,7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1125 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. எப்/2.2 அபெசர் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) கொடுக்கப்பட்டு உள்ளது.

மோனோகுரோம் (Monochrome) சப்போர்ட் கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10x டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ள முடியும். 6500mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 5 வருடங்களுக்கு பேட்டரி டியூரபிலிட்டி கொண்ட மாடலாக கிடைக்கிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங் கிடையாது. இருப்பினும், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) சப்போர்ட் இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஸ்மார்ட் ரேம் எக்ஸ்பான்சன் கிடைக்கிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் பெற்று கொள்ளலாம். ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0) கிடைக்கிறது.

ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) கிடைக்கிறது. ஐபி64 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. டிஸ்பிளேவுக்கு அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) கிடைக்கிறது. மேலும், குளோவ்டச் (GloveTouch) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது.

ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) கிடைக்கிறது. ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot) கொடுக்கப்பட்டுள்ளது. சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side fingerprint sensor) கொண்ட மாடலாக இருக்கிறது. மேலும், ப்ராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) கிடைக்கிறது. ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் ஈ-காம்பஸ் (E-compass) கிடைக்கிறது.

கலர்ஓஎஸ் 15 (ColorOS 15), டிரினிட்டி என்ஜின் (Trinity Engine), லுமினஸ் ரென்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆலிவ் கிரீன் (Olive Green) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற விலைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OPPO A6x 4G With 6500mAh Large Battery Available At Rs 650 Discount in Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X