ஹீலியோ பி35 சிப், வாட்டர் டிராப் நாட்ச்சுடன் களமிறங்கும் ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனத்தின் முந்தைய ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடலின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இந்த புதிய ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஒப்போ நிறுவனம், புதிய ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இன்று தைவானில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனத்தின் முந்தைய ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடலின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இந்த புதிய ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஒப்போ ஏ5 vs ஒப்போ ஏ5 எஸ்

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மற்றும் ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் இரண்டிற்கும் இடையிலான முதல் வேறுபாடு அதன் நாட்ச் டிஸ்பிளே அம்சமே. ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் இல் வைடு நாட்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் இல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
மீடியா டெக் ஹீலியோ பி35 சிப்செட்

அதுமட்டுமின்று ஒப்போ ஏ5 சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டிற்கும் வெவ்வேறு பிராசஸர் சிப்செட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் இல் குயல்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்டும், ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் இல் மீடியா டெக் ஹீலியோ பி35 சிப்செட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

- 6.2' இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 3ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் சேமிப்பு நீடிக்கும் சேவை
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- வாட்டர் டிராப் நாட்ச்
- கலர் OS 5.2 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- 4230 எம்.ஏ.எச் பேட்டரி

விலை

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எப்பொழுது இந்த புதிய ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பதை பற்றி தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெறும் ரூ.14,990 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் மாடலும் ரூ.20,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English Summary

Oppo A5s with waterdrop notch Helio P35 announced Specifications features : Read more about this in Tamil GizBot