Home
Mobile

மிட்ரேன்ஜ் விலையில் மிரட்டலடி.. 9000mAh பேட்டரி, டூயல்-ஆக்சிஸ் OIS கேமரா, IP69K.. OnePlus-ன் புது 5ஜி போன்!

9000எம்ஏஎச் பேட்டரி மட்டுமே ஹைலைட் ஆக இருக்குமென்று நினைத்தவர்களுக்கு செம்ம டிவிஸ்டு கொடுக்கும் படியான ஒரு வேலையை பார்த்துள்ளது - ஒன்பிளஸ் நிறுவனம். வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ள ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) மாடலின் கேமரா அம்சங்களை உறுதிப்படுத்தி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அதாவது மிட்-ரேன்ஜ் விலையில் இப்படி ஒரு கேமரா ஸ்மார்ட்போன்-ஆ என்று ஆச்சரியப்படுத்தும் படியான அம்சங்களை ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதென்ன அம்சங்கள்? வேறு என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? ஏப்ரல் 7 ஆம் தேதி சரியாக எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரலாம்? இதோ விவரங்கள்:

9000mAh பேட்டரி, டூயல்-ஆக்சிஸ் OIS கேமரா, IP69K.. OnePlus புது போன்!

ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி லான்ச் விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் வருகிற ஏப்ரல் 7, 2026 அன்று, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் வழியாக, மேலும் ஒன்பிளஸ் இந்தியாவின் யூட்யூப் மற்றும் பிற சோஷிய மீடியா தளங்களின் வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி கேமரா: ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனில் 'டூயல்-ஆக்சிஸ்' ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் கூடிய 50எம்பி சோனி ப்ரைமரி கேமரா சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 32எம்பி ஹை-ரெசல்யூஷன் கொண்ட செல்பீ கேமரா சென்சார் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 60 எபிபிஎஸ் ஸ்பீடில் (60 FPS) ஸ்டேபிள் ஆன மற்றும் ஹை குவாலிட்டியான 4கே வீடியோவை ரெக்கார்ட் (4K Video Record) செய்யும் திறனை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் காரணமாக,கேமராக்களுக்கு ஆற்றலளிக்கும் மேம்பட்ட எச்டிஆர் (HDR) மற்றும் கலர் அல்காரிதம்களை ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி ஆதரிக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ போர்ட்ரெய்ட் க்ளோ, ஏஐ எரேசர், ஏஐ அன்ப்ளர், ஏஐ பெர்ஃபெக்ட் ஷாட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல ஏஐ கேமரா அம்சங்களும் / திறன்களும் கிடைக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக மிட்-ரேன்ஜ் மார்க்கெட்டுக்கு - கிட்டத்தட்ட ஒரு ப்ரொபஷனல் இமேஜிங்கை (Professional imaging) ஒன்பிளஸ் கொண்டுவருவது போல் தெரிகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்: இந்த் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஒரு பிரத்யேக பிளஸ் கீ (Plus Key) இடம்பெறும். இதில் ஏஐ கோஸ்ட்ரைட்டர் மற்றும் ஏஐ ஸ்கேன் போன்ற பிற ஏஐ டூல்களுக்கான (AI Tools) அணுகல்கள் கிடைக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP66, IP68, IP69 மற்றும் IP69K என பல ஐபி ரேடிங்களுக்கும் இருக்கும். ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கம் கிரிஸ்டல் கார்டு கிளாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ மூலம் பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டப்படி இது 9000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்பதும்உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி விலை: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.32,000 முதல் ரூ.35,000 வரையிலான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் ரேம் செலவீனங்கள் காரணமாக இந்த விலையில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 5G Camera Specifications Confirmed Including Dual Axis OIS Ahead April 7 India Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X