அமேசானில் அல்வா சான்ஸ்.. புதுசு, பழசு உட்பட எட்டு OnePlus போன்கள் மீது டிஸ்கவுண்ட்.. ஜூன் 10 வரை!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில், ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் (OnePlus Community Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இன்று (ஜூன்.4) ஆம் தேதி முதல் தொடங்கி, வருகிற ஜூன் 10 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசானில் உள்ள விளம்பர பேனரின்படி - இந்த விற்பனையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஒன்பிளஸ் நார்ட் 6, ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 சீரிஸ், ஒன்பிளஸ் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் தொடங்கி சற்றே பழைய ஒன்பிளஸ் 13எஸ், ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய மாடல்களும் மீதும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

அமேசான் இந்தியா பேனரின்படி - என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன ஆரம்ப விலைக்கு வாங்க கிடைக்கும்?
1.ஒன்பிளஸ் நார்ட் சிஇ6 5ஜி (OnePlus Nord CE6 5G) - ரூ.29,999
2. ஒன்பிளஸ் நார்ட் சிஇ6 லைட் 5ஜி (OnePlus Nord CE6 Lite 5G) - ரூ.21,499
3. ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி (OnePlus 15R 5G) - ரூ.51,999
4. ஒன்பிளஸ் 15 (OnePlus 15) - ரூ.74,999
5. ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) - ரூ.49,999
6. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) - ரூ.39,999
7. ஒன்பிளஸ் 13 (OnePlus 13) - ரூ.52,999
8. ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) - ரூ .40,999
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் விரிவான அம்சங்கள்:
-144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே
- 1,000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 240Hz வரையிலான டச் சாம்பிளிங் ரேட்
- 392 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 91.4 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP64 ரேட்டிங்
- MIL-STD-810H சான்றிதழ்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் எஸ்ஓசி
- ஏஆர்எம் மாலி-ஜி615 ஜிபியு
- UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR4X ரேம்
- 21,683 சதுர மிமீ விசி கூலிங் சிஸ்டம்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2.88-இன்ச் ஓம்னிவிஷன் OV50D40 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் (எப்/2.4) இரண்டாம் நிலை கேமரா
- 89-டிகிரி பீல் ஆப் வியூ மற்றும் 10எக்ஸ் வரையிலான டிஜிட்டல் ஜூம்
- 4K/30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்
- 8-மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- 5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4
- ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட், GPS, GLONASS, BDS, Galileo மற்றும் QZSS
- ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.
முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications