ஐபோன்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஒன்பிளஸ் 6டி.!


நியாயமான விலையில் முதன்மை ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலுள்ள பிராண்ட் ஒன்பிளஸ் நிறுவனம்
ஆகும். மேலும் இந்நிறுவனம் சிறந்த தரம் மற்றும் சிறந்த மென்பொருள், வன்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் ஸ்மார்ட்போனை
தயார் செய்கிறது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு பல்வேறு வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், அதற்கு தகுந்தபடி புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது இந்நிறுவனம். வரவிருக்கும் மாதத்தில்  ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இணைய உலகில் பரவலாக ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பற்றிய அதிக வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு
போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்:

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே உங்கள் அனுமதியுடன் தான் மற்றவர் உங்களது போனை இயக்கமுடியும். குறிப்பாக இந்த இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி புகைப்படங்கள், வீடியோக்கள்,கோப்புகள், ஆடியோ போன்றவற்றை பாதுகாக்க பெரிதும் உதுவுகிறது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.

ஐபோனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே

ஐபோனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையற்ற மல்டிமீடியா பார்க்கும் அனுபவம் வழங்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல். இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதி கண்டிப்பாக இடம்பெருகிறது, அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனிலும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே
இடம்பெற்றுள்ளது. எனவே அனைத்து இடங்களிலும் மிக அருமையாக பயன்படுத்த முடியும். மேலும் இணையம், வீடியோ, ஸ்டிரீமிங் போன்ற சிறந்த சேவை அனுபவத்தை வழங்கும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் ரியர் கேமரா:

இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இனி வரும் ஸ்மார்ட்போன்களில் 3லென்ஸ் கேமரா அமைக்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதிகமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில்
இருக்கும் கேமராவுக்கே அதிக முக்கியத்தும் கொடுக்கின்றனர், எனவே அதற்கு தகுந்த வகையில் ஸ்மார்ட்போன்களை தாயர்
செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 9.0 அவுட்-ஆப்-தி-பாக்ஸ்:

மென்பொருள் துறையிலேயே சிறந்து விளங்கும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 9.0 அவுட்-ஆப்-தி-பாக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சிறபபு அம்சம் ஸ்மார்ட்போனை விரைவாக பயன்படுத்த உதவுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வெளிவரும் ஐபோன்களுக்கு போட்டியாக இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

வேகமான சார்ஜ்

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு வேகமான சார்ஜ் தரும் டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்க பயன்படும் வகையில் இதன் வேகமான சார்ஜ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பின்பு புதிய சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் பேட்டரியின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை இது இன்னும் அறியவில்லை, இருந்தபோதிலும் வேகமான சார்ஜ் தரும் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி

அனைத்து ஸ்மார்ட்போனகளிலும் இடமபெறும் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றுள்ளது, அந்தவகையில் 6ஜிபி ரேம் அல்லது 8ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு கேமிங் மற்றும் ஆப் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட செயலி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மேலம் சிறந்த கேமிங் தொழில்நுட்பம், சிப்செட், கேமரா,பேட்டரி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல். இருந்தபோதிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Have a great day!
Read more...

English Summary

OnePlus 6T Get ready for unmatched performance and future ready experiences: Read more about this in Tamil GizBot