Home
Mobile

அக்டோபர் 9 வரை வெயிட் பண்ணுங்க.. சோனி கேமரா.. 7000mAh பேட்டரி.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

அக்டோபர் 9-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளன. அதேபோல் தரமான மோட்டோரோலா 5ஜி போன் ஒன்று இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.

அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி77 பவர்(Motorola g77 Power) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.22,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோரோலா போன் ரூ.20,999 விலையில் வாங்க கிடைக்கும். இதுதவிர வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அக்டோபர் 9 வரை வெயிட் பண்ணுங்க.. ஆஃபரில் Motorola 5ஜி போன்..

மோட்டோரோலா ஜி77 பவர் அம்சங்கள்: சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த மோட்டோரோலா போனில் உள்ளது.

தரமான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்ஸ், 1050 நிட்ஸ் HBM பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக 50எம்பி Sony LYTIA 600 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2-இன்-1 லைட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

அதுவும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன். அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி77 பவர் மாடல்.

அக்டோபர் 9 வரை வெயிட் பண்ணுங்க.. ஆஃபரில் Motorola 5ஜி போன்..

எப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5mm headphone jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன.

மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Motorola G77 Power Available at Rs 20999 During Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X