Home
Mobile

மோட்டோரோலா களமிறக்கும் முதல் Wide Fold போன்.. 50எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது முதல் வைட் போல்டபிள் (அகலமான மடிக்கக்கூடிய) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த போன் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது.

12.6 மிமீ தடிமனும் 215 கிராம் எடையுயும் கொண்ட மோட்டோரோலா வைட் போல்டபிள் போன் (Motorola wide foldable phone) ஆனது டூயல் ரியர் கேமராக்கள், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த புதிய மோட்டோரோலா போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா களமிறக்கும் முதல் Wide Fold போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா வைட் போல்டபிள் போன் அம்சங்கள் (Motorola wide foldable phone Specifications): 6.92-இன்ச் OLED இன்னர் டிஸ்பிளே உடன் மோட்டோரோலா வைட் போல்டபிள் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,728 x 2,364 பிக்சல்ஸ், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அதேபோல் இந்த போனில் 497-இன்ச் ஒஎல்இடி கவர் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. இந்த சிறிய டிஸ்பிளேவில் 1,736 x 1,140 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. சியோமி 18 போல்டபிள் ஸ்மார்ட்போனை விட சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் இந்த மோட்டோரோலா போன்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) வசதியுடன் மோட்டோரோலா வைட் போல்டபிள் போன் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை தரும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் மோட்டோரோலா வைட் போல்டபிள் போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா வைட் போல்டபிள் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 17 மூலம் மோட்டோரோலா வைட் போல்டபிள் போன் இயங்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். IP48 மற்றும் IP49 ரேட்டிங் உடன் இந்த புதிய போன் வெளியாகும்.

மோட்டோரோலா களமிறக்கும் முதல் Wide Fold போன்.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் டூயல் செல் பேட்டரி உடன் மோட்டோரோலா வைட் போல்டபிள் போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 25W Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா வைட் போல்டபிள் போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: androidheadlines, AH

Best Mobiles in India

English summary
Motorola First Wide Foldable Leaks With 165Hz Display, 5,000mAh Battery and Dual 50MP Cameras
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X