இன்று: 108எம்பி கேமராவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.!


மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் இன்று பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வழியாக ஜூன் 18 க்கு முன்பு வாங்கினால், உங்களுக்கு ரூ.7,500 என்கிற தள்ளுபடி கிடைக்கும்.

Advertisement

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2520 × 1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர் 10+ ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது.

Advertisement

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா? சுந்தர் பிச்சை கருத்து.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டு ஆதரவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, வைஃபை 6 802.11, (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், ஏ-ஜி.பி.எஸ், க்ளோனாஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும்
3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டாகசமான ஸ்மார்ட்போன் மாடல்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.74,999-ஆக
உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English Summary

Motorola Edge Plus Sale Live on Flipkart in India: Read more about this in Tamil GizBot