இதுக்கு தானே வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Moto 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் கடந்த மாதம் மோட்டோ ஜி37 பவர் (Moto G37 Power) போனை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது வரும் மே 19-ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி37 பவர் போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் மோட்டோ ஜி37 பவர் போன் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி37 பவர் அம்சங்கள் (Moto G37 Power specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 6.67-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி37 பவர் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1050 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதுவும் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2-இன்-1 ஆம்பியன்ட் மற்றும் ஃப்ளிக்கர் லைட் சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இதில் உள்ளது.
மோட்டோ ஜி37 பவர் போன் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேடிங்கையும் பெற்றுள்ளது. இதுதவிர MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி37 பவர் போன் அறிமுகமாகும். இந்த பேட்டரியை சார்ஜ் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, என்எப்சி, எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
பான்டோன் இம்பெனட்ரேபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ ( Pantone Nautical Blue) மற்றும் பான்டோன் ஃகாப்ரி ( Pantone Capri) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மோட்டோ போன்.


Click it and Unblock the Notifications