Moto G Stylus (2021) போனின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சம் அமேசான் தளத்தில் வெளியானது..
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் என்ற முந்தைய மாடலின் வாரிசாக புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாகியுள்ளது. ஸ்டைலஸ் அம்சத்துடன் அறிமுகத்திற்குத் தயாராக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விலை விபரம் மற்றும் சிறப்பம்ச விபரங்கள் அமெரிக்க அமேசான் தளத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் (2021)
அமேசான் யு.எஸ் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சாத்தியமான விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் பட்டியல் இப்போது அகற்றப்பட்டது, ஆனால் இந்த போனின் சில விவரக்குறிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ தோற்றமுடைய படங்களை அமேசான் வெளிப்படுத்தியுள்ளது. பட்டியலின் படி, மோட்டோ ஜி ஸ்டைலஸ் (2021) அமெரிக்காவில் 341.89 டாலர் என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பின் விலை
இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ .25,100 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் தளத்தில் இந்த புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் போனுக்காக ஒரு ஒதுக்கிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 அரோரா பிளாக் மற்றும் ஆரா ஒயிட் போன்ற வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்பட்டது. இந்தியாவிலும் இந்த போன் எதிர்பார்க்கப்படுகிறது.

Moto G Stylus (2021) சிறப்பம்சம்
- 6.8' இன்ச் முழு எச்டி + பன்ச் ஹோல் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்
- குவாட்-கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- NFC கிடையாது
- வலது விளிம்பில் கைரேகை சென்சார்
- 4,000 எம்ஏஎச் பேட்டரி



Click it and Unblock the Notifications








