Home
Mobile

OnePlus-க்கு தூக்கம் போச்சு.. புது கேமரா, 8000mAh பேட்டரி, 12GB ரேம் உடன் இன்னொரு புது iQOO போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தை நிம்மதியாக தூங்க விட கூடாது என்று ஐக்யூ (iQOO) நிறுவனம் முடிவெடுத்து விட்டது போல் தெரிகிறது. ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடலுக்கு போட்டியாக வருகிற மே 20 ஆம் தேதி அன்று, 8000mAh பேட்டரி, 100W சார்ஜிங் மற்றும் 200MP கேமராவுடன் ஐக்யூ 15டி (iQOO 15T) அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் வரப்போகும் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) மாடலுக்கு போட்டியாக உருவாகும் ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போனின் கேமராக்கள் குறித்த தரமான அப்டேட் கிடைத்துள்ளது. சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆக வந்த மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக வரும் என்பதும், ஆனால் ஐக்யூ 15டி, ஒன்பிளஸ் 16, ஐக்யூ 16 ஆகிய மாடல்கள் அதே பெயர்களின் கீழ் இங்கே வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புது கேமரா, 8000mAh பேட்டரி, 12GB ரேம் உடன் இன்னொரு புது iQOO போன்!

ஐக்யூ 16, ஒன்பிளஸ் 16 எப்போது அறிமுகம் ஆகும் ? ஐக்யூ நிறுவனம் வருகிற அக்டோபர் மாதம், ஐக்யூ 16 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே அக்டோபர் மாதத்தில் தான் ஒன்பிளஸ் 16 மாடலும் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 16 கேமரா லீக்: டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்காக 200-மெகாபிக்சல் மற்றும் 50-மெகாபிக்சல் ஆப்ஷன்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது, ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் பொறியியல் முன்மாதிரி (engineering prototype) ஆனது, ஒரு பெரிய 1/1.3-இன்ச் சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் நடுத்தர அளவிலான சென்சாரை பயன்படுத்தும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உடன் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் அல்ட்ரா-வைட் கேமரா பற்றி எந்த தகவலும் இல்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் அந்த ரியர் கேமரா செட்டப்பில் மூன்று 50-மெகாபிக்சல் கேமராக்களை கொண்டிருக்கலாம் என்பது போல் தெரிகிறது. ஒன்பிளஸ் 16 ஆனது 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் இரண்டு 50 மெகாபிக்சல் லென்ஸ்களை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (தற்காலிக பெயர்) சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 2கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.85-இன்ச் சாம்சங் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை. இருப்பினும், இது 8000mAh-க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தில், அதன் மேல் ஆரிஜின்ஓஎஸ் 7 லேயர்டு செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விலையை பொறுத்தவரை ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட பேஸிக் வேரியண்டின் விலை சுமார் 5,000 யுவான் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.70,500) ஆக இருக்கலாம். இதன் போட்டியாளர் ஆன ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.64,999 - ரூ.75,999 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iQOO 16 Camera Details Leaked Its Seems iQOO Ready to Give Tough Competition to OnePlus 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X