Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. 100W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனின் ஏபெக்ஸ் (Apex) கலர் வேரியண்ட் வெளியாகி இருப்பதை தொடர்ந்து ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக மற்ற கலர் வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 7000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்களை இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

ஆல்பா (Alpha) என்னும் ஒயிட் மற்றும் லெஜண்ட் (Legend) என்னும் கிரே ஆகிய கலர்களில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதில் டூயல் டோன் கொண்ட ஏபெக்ஸ் கலர் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. இந்த வெளியீட்டை முன்னிட்டு ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.72,998ஆக இருக்கிறது. ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.68,998 விலைக்கு கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. 100W சார்ஜிங்.. மாடல்?

ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) கொடுக்கப்பட்டு உள்ளது.

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், 5 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை (Android OS Updates) கொடுத்து உள்ளது. மேலும், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஓர்ஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0 கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

8கே விசி கூலிங் சிஸ்டம் (8K VC Cooling System) மற்றும் 144 எப்பிஎஸ் (FPS) ஃபிரேம் ரேட் போன்ற கேமிங் பீச்சர்கள் கிடைக்கிறது. 6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) சாம்சங் எம்14 (Samsung M14) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுக்கு 2K+ ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2600 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது.

கேமிங் மாடலாக இருந்தாலும், கேமராவில் பட்டையை கிளப்பி இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனி ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 With 12GB RAM Gets Rs 4000 Bank Discount on Amazon After New Apex Colour Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X