48எம்பி கேமராவுடன் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!


ஹூவாய் நிறுவனம் சீனாவில் புதிய ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம், பிங்க் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 2199யுவான்( இந்திய மதிப்பில் ரூ.23,410) ஆக உள்ளது. இப்போது என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Advertisement

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸமார்ட்போனின் 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது.

Advertisement

இந்த ஸ்மார்ட்போக் மாடல் மீடியாடெக் Dimensity 800 பிராசஸர் வசதியுடன் 7என்எம் சிப், கார்டெக்ஸ்-ஏ76 ஆதரவுகொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் EMIUI 10.1ஆதரவைக் கொண்டுள்ளதால் இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும்.

குட்டீஸ்க்கு மனஅழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள இதான் வழி! ட்ரை செஞ்சு பாருங்க!

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

youtube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஆதரவு, 5 ஜி (எஸ்ஏ/ என்எஸ்ஏ) / இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி-வகை சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English Summary

Huawei Enjoy Z 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot