3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரியுடன் களமிறங்கிய ஹானர் 10 லைட்.!

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.


ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் தற்சமயம் வெளிவந்துள்ளது, மேலும் இதற்கு முன்பு 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

Advertisement


3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.

Advertisement

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் 710 12என்.எம் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை EMUI 9.0 இயங்குதள ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா:

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 24எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி:

ஹானர் 10 லைட் பொறுத்தவரை 3400எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English Summary

Honor 10 Lite gets a new variant in India with 3GB RAM and 32GB storage: Read more about this in Tamil GizBot