ஆன்லைனில் ஸ்மார்ட்போன் விற்பனையை துவங்கும் ஹுவெய்

இன்றளவில் ஆன்லைனில் எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்வது சூடுபிடித்திருக்கிறது. இதனால் விற்பனை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த முடியும் என்று மார்கெட்டிங் டிரெக்டர் ஆனந்த் நரங் கூறியுள்ளார்.ஹுவெய்வெய் ஹேண்செட் விற்பனைக்கு டிரேடஸ் ஹேண்செட் சிறந்த வலைதளம் இருக்கும் என்றும் ஆன்ந்த் நரங் கூறியிருக்கிறார்.
ஆன்லைன் மூலம் ஹுவெய்வெய் ஸ்மார்ட்போன்களை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,757 வரை தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் டிரேடஸ்.இன் இணையதளத்தில் இந்த ஹேண்செட்டை பணம் செலுத்தியோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ வாங்கலாம்.
இதை மூன்று தவணையிலும் வாங்கிக்கொள்ளும் சலுகையையும் பெற முடியும். ஹுவெய் ஸ்மார்ட்போனின் விலையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஹுவெய் இடியோஸ் எக்ஸ்-5 யூ-8800 ரூ.14,307 விலையிலும், ஹுபவெய் இடியோஸ் எக்ஸ்-2 யூ-8500 ரூ.7,676 விலையிலும் மற்றும் ஹுவெய்வெய் இடியோஸ் சாட் யூ-8300, ரூ.7,130 விலையிலும் கிடைக்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
