அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!


அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 (3ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை தற்சமயம் ரூ.7,499-விலையில் ஆன்லைன் தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மெட்டாலிக் பாடி வடிவமைப்பு

அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ரூ.8,999-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்டஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடல் ரூ.11, 499-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மெட்டாலிக் பாடி வடிவமைப்பு
அசுஸ்போன்களுக்கு என்று அடிப்படை வடிவமைப்பு உள்ளது. ஆனால், தற்போது இந்த வடிவமைப்பை பல ஸ்மார்ட் போன்களில் பார்க்க முடிகிறது. இந்த புதிய போனில் பாதுகாப்பான வெளிப்புறம் உள்ளது. மெட்டாலிக் பாடி வடிவமைப்பு கொண்டது. செல்போனின் பின்புறத்தில் 2 ரியர் கேமரா செட் அப் உள்ளது.

Advertisement
விரல் ரேகை சென்சார்

பின்புறத்தின் மையப் பகுதியில் விரல் ரேகை சென்சார் உள்ளது. இடது புறத்தில் வால்யூம் கீயுடன் கூடிய பவர் பட்டன் உள்ளது. 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி செலுத்தும் வசதி கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் அசுஸ்உயர்ந்து நிற்கிறது. 2160*1080பிக்சல் ரிசல்யூஷன் மற்றும் ஃஎப்ஹெச்டி 5.99 அங்குல ஸ்க்ரின் கொண்டதாகும்

சூரிய வெளிச்சத்தில் கண் கூசாத டிஸ்ப்ளே

இரவு நேரத்தில் பளிச்சிடும் விளக்கு, ஏற்ற பிரைட்னஸ் வசதி கொண்டது. ஃபான்ட் அளவுல டிஸ்ப்ளே அளவு, திரையின் சத்தம் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ள பிரத்யேக வசதி உள்ளது. டிஸ்ப்ளே தரம் என்பது குறைச் சொல்ல முடியாத அளவில் உள்ளது. போட்டோக்கள் அனைத்து துல்லியமான காட்சியை அளிக்கிறது. சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேயை கண் கூசாமல் பார்க்க கூடிய அளவுக்கு அதிகப்படியான ப்ரைட்னஸ் வசதி உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்

ஜில்லுனு இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் இதில் உள்ளது. கைரோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சந்தையில் கிடைக்கும் 2வது சிப் செட் இந்த மாடல் தான் என்பது சிறப்பம்சமாகும். 3ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. செல்போன் சூடாகும் என்ற பேச்சுக்கே இதில் இடமில்லை. எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும்.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விவரக்குறிப்பு: - 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே 1080 பிக்சல் 18:9 விகித திரை - 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலி - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்கம் - 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா - 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா - 5000எம்ஏஹெச் பேட்டரி - கைரேகை சென்சார், வைப்பை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் என இதர அம்சங்களுடன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விவரக்குறிப்பு:
- 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே 1080 பிக்சல் 18:9 விகித திரை
- 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்கம்
- 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா
- 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா
- 5000எம்ஏஹெச் பேட்டரி
- கைரேகை சென்சார், வைப்பை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி,
மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் என இதர அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.

Best Mobiles in India

English Summary

Asus Zenfone Max Pro M1 Receives Yet Another Price Cut in India : Read more about this in Tamil GizBot