Home
Mobile

புதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்துகிறது வீடியோகான்

By Super
புதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்துகிறது வீடியோகான்
இயந்திர சாதனங்களில் சிறந்த தொழில் நுட்பம் கொடுத்து மக்களின் பாராட்டுக்களை வெகு சுலபமாகத் தட்டிச் செல்கின்றது வீடியோகான் நிறுவனம். அந்த வகையில் மீண்டும் வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறத் துடித்துக் கொண்டிருக்கிறது வீடியோகான் நிறுவனம்.

விஜி-1515 என்ற புதிய பட்ஜெட் போனை விரைவில் சந்தைக்கு கொண்டு வருகிறது வீடியோகான். இந்த மாடல் டியூவல் சிம் வசதி கொண்டது. இரண்டு சிம்களை ஒரே சமயத்தில் உபயோகிக் முடியும். டிஎஃப்டி கலர் மற்றும் 240 X 320 பிக்ஸல் திரை வசதி கொண்டது. இதில் ஒரு ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

1.3 மெகா பிக்ஸல் கொண்டல் அந்த கேமராவின் மூலம் எதையும் துல்லியமாகப் பார்க்க முடியும்.இதன் மூலம் ஏதேனும் புகைப்படம் எடுத்தாலும் அதை மிகவுல் எளிதாக சூம் செய்து பார்க்க முடியும். ஜிபிஆர்எஸ் வசதியினால் நெட் சவுகரியத்தை பெற முடியும்.

புளூடூத் வசதினால் சுவாரஸ்யமான தகவல்களை நொடிப்பொழுதில் பரிமாறிக்கொள்ள முடியும். விஜி-1515 மாடலில் வாடிக்கையாளர்களின் பயனுக்காக எஸ்டி கார்டு கொடுக்கப்ட்டுள்ளது. டி-ஃப்ளாஷ் மெமரி கார்டு உள்ளதால் 16 ஜிபி வரை தகவல்களை சேகரித்துக் கொள்ள முடியும்.

நேரங்களை இனிமையானதாக்க கேம்ஸ், ம்யூசிக் ப்ளேயர், வீடியோ ப்ளேயர் போன்ற வசதிகளும் உள்ளன.இந்த ஹேண்செட் மாடலில் உயர்ந்த ரக பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்து டாக் டைம் கொடுக்கிறது.

இந்த வீடியோக்கான் விஜி-1515 மாடலின் விலையைக் கேட்டால் நிச்சயம் அதிசயித்துத் தான் போவீர்கள். ஏனென்றால் இத்தனை தொழில் நுட்பம் கொண்ட இந்த மாடல் ரூ.4,850 விலைக்குக் கிடைக்கிறது. இந்த மாதத்திற்குள் வீடியோக்கான் விஜி-1515 மாடல் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X