இந்த தேதியில் இருந்து இந்த இயங்குதளங்களுக்கு கார்டனா வசதி வழங்கப்படாது


மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவையான கார்டனா ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளில் ஜனவரி 31, 2020 முதல் இயங்காது என அறிவித்துள்ளது. இந்தியா, பிரிட்டன், சீனா மற்றும் கனடாவில் இந்த செயலி கிடைக்காமல் போகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயலி புதிய ஆஃபீஸ்365 செயலியில் கிடைக்கும்.

Advertisement


கார்டனா செயலி மற்றும் மைக்ரோசாஃப்ட் லான்ச்சரில் ரிமைன்டர் மற்றும் லிஸ்ட்ஸ் போன்ற அம்சங்கள் இனி இயங்காது. எனினும், இவற்றை விண்டோஸ் தளத்துக்கான கார்டனாவில் பயன்படுத்த முடியும். கார்னடா ரிமைன்டர், லிஸ்ட் மற்றும் டாஸ்க் போன்ற அம்சங்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் டு-டூ செயலியில் சேர்க்கப்படுகிறது. இதனை மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இவைதவிர ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் வெளியிடப்பட்ட கார்டனா செயலிக்கு அப்டேட்கள் வழங்கப்பட்டன. கார்டனா சேவை கூகுள் அசிஸ்டண்ட், சிரி அல்லது அலெக்சா போன்று பிரபலம் கிடையாது என்பதால், பயனர்களுக்கு இது பெரிய அளவில் பாதிப்பாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

Advertisement

கார்டனா பிரபலமான விர்ச்சுவல் அசிஸ்டண்ட் இல்லை என்றபோதும், இதில் பல்வேறு பயனுள்ள அம்சங்கள் வழங்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் செயலி நேரம், இடம் மற்றும் பயனர் ரீதியில் ரிமைன்டர் அம்சத்தை வழங்குகிறது. இதை கொண்டு குழுக்களை கண்காணித்தல், விருப்பங்களை அறிந்து கொள்வது மற்றும் விமான விவரங்களை அறிந்து கொள்ள முடியும். அசிஸ்டண்ட் பயன்படுத்தி மின்னஞ்சல், குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.


இத்துடன் கார்டனா கொண்டு லிஸ்ட்களை உருவாக்கவோ அல்லது இயக்கவும் முடியும். இசை, பாட்காஸ்ட், ரேடியோ மற்றும் கேமிங் என பல்வேறு அம்சங்களை கார்டனா மூலம் இயக்க முடியும். கார்டனா சேவையை இயக்க செயலியை திறந்து செட்டிங்ஸ் மெனு செல்ல வேண்டும். பின் Hey Cortana என்ற ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். கார்டனா செயலி மற்றும் அதன் சில அம்சங்கள் குறைந்த நாடுகளில் மட்டுமே இனி கிடைக்கும்.
Best Mobiles in India

Advertisement

English Summary

Microsoft To Kill Cortana Support For iOS And Android From January 31, 2020 : Read more about this in Tamil GizBot