ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?


ஸ்மார்ட்போன் யுகத்திலும் நாம் செல்லும் எல்லா இடங்களிலும் இண்டர்நெட் இருக்கும் என உறுதியாக கூற முடியாது. அதுபோல் இணைய வசதியில்லா பகுதிகளில் சிக்கிய போது அவசியம் இருக்குமிடத்தை நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தாருடனோ பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் இணைய வசதி இல்லாமலேயே லொகேஷனை பகிர்ந்து கொள்ள முடியும்.

இண்டர்நெட் இணைப்பின்றி அனுப்ப முடியும்

ஆர்.சி.எஸ். (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) எனும் சேவையை கொண்டு எஸ்.எம்.எஸ். சேவையில் பல்வேறு தகவல்களை பகிரந்து கொள்ளும் வசதியை பெற்று இருக்கிறது. இதில் லொகேஷனும் அடங்கும். எஸ்.எம்.எஸ். சேவையை இண்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும் என்பது போல், லொகேஷனையும் இண்டர்நெட் இணைப்பின்றி அனுப்ப முடியும்.

எஸ்.எம்.எஸ்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் லொகேஷனை பகிர்ந்து கொள்ளும் வசதி அதிகம் எதி்ர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது. அந்த வகையில் எஸ்.எம்.எஸ். மூலம் லொகேஷனை பகிர்ந்து கொள்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.!

1 - கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு மெசேஜஸ் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

2 - செயலியை லான்ச் செய்து தேவையான அனுமதியை வழங்க வேண்டும். மேலும் செயலியை ஸ்மார்ட்போனின் டீஃபால்ட் எஸ்.எம்.எஸ். செயலியாக செட் செய்ய வேண்டும்.

3 - இனி ஸ்டார்ட் சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - மொபைல் நம்பரை பதிவிடவோ அல்லது காண்டாக்ட் பட்டியலில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

5 - இனி சாட் விண்டோவில் உள்ள + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

6 - கீழ்புறமாக ஸ்கிரால் செய்து மேப்ஸ் ஆப்ஷனை கண்டறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்

7 - அடுத்த திரையில் சென்ட் திஸ் லொகேஷன் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

Most Read Articles

Best Mobiles in India

Read More About: android smartphone sms how to

Have a great day!
Read more...

English Summary

How to share location via SMS on Android smartphones : Read more about this in Tamil GizBot