இன்ஸ்டாகிராம் செயலியில் வரும் குறுந்தகவல்களை கணினியில் திறப்பது எப்படி?


இன்ஸ்டாகிராம் செயலியில் டைரக்ட் மெசேஜ் அல்லது டி.எம். என அழைக்கப்படும் குறுந்தகவல் சேவை மற்ற செயலிகளில் இருப்பதை போன்று செயல்படுகிறது. இன்ஸ்டாகிராமின் டி.எம். சேவையை கொண்டு புகைப்படம், வீடியோக்கள், மறைந்து போகும் குறுந்தகவல்கள், லொகேஷன் ஷேரிங் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.'

Advertisement


இன்ஸ்டாகிராம் மொபைல் செயலி

எனினும், இன்ஸ்டாகிராம் மொபைல் செயலி என்பதால், இதன் அம்சங்களை பெரும்பாலும் செயலியில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனினும், இந்த செயலிக்கென பிரத்யேக வலைப்பக்கம் இருக்கிறது. இதில் பயனர்கள் தங்களின் ஃபீடை ஸ்கிரால் செய்வது, போஸ்ட்களுக்கு லைக், கமென்ட் போன்றவற்றை செய்ய முடியும். இதைதவிர புகைப்படம், வீடியோ அல்லது டி.எம். எனப்படும் குறுந்தகவல் போன்ற அம்சங்களை இயக்க முடியாது.

Advertisement

எனினும், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் டி.எம். அல்லது குறுந்தகவல் அம்சத்தை இயக்க வழிமுறை இருக்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

விமானத்தின் அருகே விழுந்த இடி: வைரலாகும் புகைப்படம்

விண்டோஸ் 10 தளத்திற்கான இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது

லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் சாதனங்களில் விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எனில், இன்ஸ்டாகிராம் செயலியை விண்டோஸ் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.

1 - விண்டோஸ் ஸ்டோர் சென்று இன்ஸ்டாகிராம் என சர்ச் செய்ய வேண்டும்

2 - இன்ஸ்டால் பட்டனை க்ளிக் செய்து, இன்ஸ்டால் ஆனதும் செயலியை இயக்க வேண்டும்

3 - இன்ஸ்டாகிராம் சேவைக்கான விவரங்களை கொண்டு சேவையில் லாக் இன் செய்ய வேண்டும்

4 - டைரக்ட் மெசேஜ்களை சரிபார்க்க, செயலியில் இருப்பதை போன்று இருக்கும் அம்பு குறி ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

5 - இதில் அனைத்து புதிய குறுந்தகவல்களும் இடம்பெறும், அவற்றில் நீங்கள் விரும்பும் குறுந்தகவல்களை படித்து அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும்

விண்டோஸ் அல்லது மேக் சாதனத்தில் ஆண்ட்ராய்டு எமுலேட்டர் பயன்படுத்துவது

விண்டோஸ் இயங்குதளத்தின் பழைய வெர்ஷனை பயன்படுத்தினாலோ அல்லது மேக்புக் பயன்படுத்தினால் ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சேவையை டவுன்லோடு, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


இதற்கு நீங்கள் விரும்பும் எமுலேட்டர் ஒன்றை டவுன்லோடு செய்து திரையில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றி சேவையை இயக்க தொடர வேண்டும். இனி கூகுள் பிளே ஸ்டோர் சென்று இன்ஸ்டாகிராம் செயலியை தேடி அதனை டவுன்லோடு செய்ய வேண்டும். டவுன்லோடு செய்யப்பட்டதும் கம்ப்யூட்டரில் இன்ஸ்டாகிராம் சேவையில் லாக் இன் செய்து மெசேஜ் அம்சத்தை இயக்கலாம்.

கூகுள் குரோம்

இதைதவிர கூகுள் குரோம் பிரவுசரில் இருந்தபடி இந்த அம்சத்தை மிக எளிமையாக இயக்க முடியும். கூகுள் ஏ.ஆர்.சி. வசதி ஒன்றை வழங்கியிருக்கிறது. இதை கொண்டு டெவலப்பர்கள் செயலியை உருவாக்கி அவற்றை சோதனை செய்ய முடியும். பின் ஏ.ஆர்.சி. வெல்டர் எனும் எக்ஸ்டென்ஷன் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதை கொண்டு ஏ.பி.கே. ஃபைல் மூல்ம கூகுள் குரோமில் இயக்க முடியும்.

Best Mobiles in India

English Summary

How to open Instagram messages on laptop or desktop PC : Read more about this in Tamil GizBot