செயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி?


தனியுரிமை தான் இன்றைய காலக்கட்டத்தின் மிகமுக்கிய விஷயமாக இருக்கிறது. பயனர் விவரங்கள் லீக் ஆவது தொடர்கதையாகி விட்டது. பயனர் விவரங்கள் லீக் ஆவதால், தனியுரிமை விரைவில் தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கிய பிரச்சனையாகிவிட்டது.

Advertisement

இந்நிலையில், செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேகரிக்கும் தகவல்களை பற்றி அறிந்து கொள்ள பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. சமீபத்தில் கேஸ்பர்ஸ்கை எனும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் பெரும்பாலான செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வாறு தகவல்களை சேகரிக்கின்றன என்பதை விளக்கும் கட்டுரையை வெளியிட்டது.

Advertisement


உதாரணத்திற்கு நேவிகேஷன் செயலி, வாடிக்கையாளர்களின் பொசிஷனிங் விவரங்களை கொண்டு அவர்கள் செல்லும் இடங்களை அறிந்து கொள்கின்றன. பெரும்பாலான செயலிகள் வாடிக்கையாளர்களின் அனுமதி பெற்று செயலியின் தரத்தை மேம்படுத்தவோ, அதன் மூலம் ஆதாயம் பெறவோ விவரங்களை சேகரிக்கின்றன. செயலியின் மிக நுணுக்கமான விவரங்களை அறிந்து கொள்வதற்காக செயலியை உருவாக்கும் டெவலப்பர்கள் பல்வேறு விவரங்களை சேகரிக்கின்றனர். சில டெவலப்பர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கில், செயலிக்கு முற்றிலும் தொடர்பில்லாத வகையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து முடிந்த வரையிலான தகவல்களை சேகரிக்கின்றனர்.

இதுபோன்ற செயலிகளை கண்டறிய பல்வேறு சேவைகளை பயன்படுத்த முடியும். ஆப்சென்சஸ் சேவையை கொண்டு செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தெந்த தகவல்களை சேகரிக்கின்றன என்பதையும் அவற்றை யாருக்கு அனுப்புகின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு அந்த செயலிகள் டைனமிக் அனாலசிஸ் எனும் வழிமுறையை பயன்படுத்துகின்றன.

Advertisement

இந்த செயலி மொபைல் சாதனத்தில் இன்ஸ்டால் செய்து, தேவையான அனுமதியை வழங்கிய குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த சேவை செயலிகளை கண்காணித்து அவை எந்தந்த தகவல்களை அனுப்புகின்றன என்பதையும் அவற்றை யார்யாருக்கு அனுப்புகின்றன என்பதையும், அந்த தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதையும் கவனிக்கும். இதேபோன்ற அம்சத்தை வழங்கும் மற்றொரு சேவை எக்சாடஸ் பிரைவசி.

ஆப்சென்சஸ் போன்று இல்லாமல் எக்சோடஸ் பிரைவசி செயலிகளின் நடவடிக்கைக்கு மாற்றாக செயலியை பற்றி கண்காணிக்கும். இந்த சேவை செயலி பயன்படுத்தக் கேட்கும் அனுமதி, அதில் இருக்கும் பில்ட்-இன் டிராக்கர்கள், வாடிக்கையாளரின் தகவல்களை சேகரிக்க மூன்றாம் தரப்பு மாட்யூல் போன்றவற்றை ஆய்வு செய்யும். டெவலப்பர்கள் அடிக்கடி தங்களின் செயலிகளில் விளம்பர முகமைகளின் டிராக்கர்களை சேர்க்கின்றன. இதை கொண்டு தனிப்பட்ட விளம்பரங்களை வழங்க முடியும். தற்சமயம் எக்சோடஸ் பிரைவசி இதுபோன்று இயங்கும் 200 விதமாக டிராக்கர்களை கண்டறியும் திறன் கொண்டிருக்கிறது.

Advertisement


இரு சேவைகளையும் பயன்படுத்துவது மிகவும் எளிமையான ஒன்று தான். செயலியை எளிமையாக சர்ச் செய்தால் அவை எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறது என்றும் அவற்றை யாருக்கு அனுப்புகின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆப்சென்சஸ் போன்று இல்லாமல் எக்சோடஸ் பட்டியலில் உள்ள செயலிகளை மட்டுமின்றி நியு அனாலசிஸ் டேப் கொண்டு கூகுள் பிளேவில் உள்ள செயலிகளையு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English Summary

Worried about privacy? Here's how to find out what data apps are collecting about you : Read more about this in Tamil GizBot