ஆண்ட்ராய்டு ஹோம்ஸ்கிரீனில் ஐகான் பெயர்களை மாற்றுவது எப்படி?


மொபைல் போன் இயங்குதளங்களில் முதன்மையான ஒன்றாக ஆண்ட்ராய்டு இருக்கிறது. மற்ற மொபைல் இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு அதிகளவு கஸ்டமைசேஷன் வசதிகளை வழங்குகிறது. பயனர் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்ய ஆண்ட்ராய்டு பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

Advertisement


ஆண்ட்ராய்டு பயனர் என்ற வகையில் ஸ்மார்ட்போனில் ஒவ்வொரு புதிய செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டாலும், அதற்கான ஐகான் உருவாக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். ஹோம் ஸ்கிரீனில் உள்ள புதிய செயலியில் எப்போதும் ஐகான் பெயர் தானாகவே பதிவிடப்பட்டு இருக்கும். செயலியை பயன்படுத்துவதில் ஐகான்கள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன. எனினும், ஐகான் பெயர்களை யார் வேண்டுமானாலும் மாற்ற முடியும்?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஹோம் ஸ்கிரீனில் உள்ள ஐகான் பெயர்களை மாற்ற முடியும். எனினும், இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பில் ஆண்ட்ராய்டு போன்களின் ஐகான் பெயர்களை எளிமையாக மாற்றுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

Advertisement

க்விக் ஷார்ட்கட் மேக்கர்
பெயருக்கு ஏற்றார்போல் க்விக் ஷார்ட்கட் மேக்கர் செயலியை கொண்டு கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளுக்கு ஷார்கட் உருவாக்க முடியும். இந்த செயலியை கொண்டு ஹோம் ஸ்கிரீன் ஷார்ட்கட்களின் பெயர்களை கஸ்டமைஸ் செய்ய முடியும்.


- முதலில் க்விக் ஷார்ட்கட் மேக்கர் செயலியை ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோடு செய்ய வேண்டும்.

- ஸ்மார்ட்போனில் செயலி இன்ஸ்டால் செய்யபப்ட்டதும் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை பார்க்க முடியும்.

- இனி நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் செயலியை க்ளிக் செய்ய வேண்டும்.

- சாதனத்தில் செயலியின் விவரங்கள் தெரியும். இத்துடன் Change the Label எனும் ஆப்ஷன் திரையில் தோன்றும்

Advertisement

- பாப்-அப் தோன்றியதும் செயலியில் நீங்கள் வைக்க விரும்பும் பெயரை குறிப்பிட்டு OK என க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி சாதனத்தில் Create ஆப்ஷன் தெரியும். இதை கொண்டு ஆப் ஷார்ட்கட் உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்ததும் செயலி திரையில் பட்டியலாகி இருக்கும்.

Best Mobiles in India

Advertisement

English Summary

How To Change Icon Names On Android Homescreen: Read more about this in Tamil GizBot