யூடியூப் வீடியோக்களில் உள்ள இசை மற்றும் பாடல்களை கண்டறிவது எப்படி?


யூடியூபில் நீங்கள் பார்த்து ரசித்த திரைப்படத்தின் டீசர் அல்லது டிரெயிலர் மியூசிக் அல்லது பி.ஜி.எம். அதிகம் பிடித்துவிட்டதா? யூடியூபில் அனைவருக்கும் பிடித்த தரவுகள் இருக்கின்றன, ஆனால் இவற்றை கண்டறிய சிறிது நேரம் செலவழித்தாலே போதுமானது.

யூடியூப் வீடியோக்களில் மிகப்பெரும் குழப்பமாக இருப்பது, குறிப்பிட்ட வீடியோவினை நீங்கள் பார்க்கலாம் என நினைத்திருக்கவே மாட்டீர்கள். இது பல சமயங்களில் நடக்கும், உங்களை திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும் இசை நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஏதேனும் வீடியோவில் இடம்பெற்றிருக்கலாம்.

இப்படியான சூழல்களில் பாடலின் பெயரை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்:

வீடியோ டிஸ்க்ரிப்ஷனில் கொடுக்கப்பட்டு இருப்பதை பார்க்கவும்

வீடியோவில் பயன்படுத்தப்பட்ட மியூசிக் நிச்சயம் அந்த வீடியோ டிஸ்க்ரிப்ஷனில் கொடுக்கப்பட்டு இருக்கும். பெரிய நிறுவனம் துவங்கி சமீபத்திய யூடியூபர் வரை அனைவரும் தங்களது வீடியோவிற்கு பங்களிக்கப்பட்டுள்ளவற்ற டிஸ்க்ரிப்ஷனில் குறிப்பிட்டு இருப்பர்.

லிரிக்சை கூகுள் செய்யவும்

நீங்கள் கேட்கும் பாடலின் லிரிக்சை கேட்க முடிந்தால் உங்களது தேடல் எளிமையாகிவிடும். நீங்கள் பாடலின் லிரிக்சை கூகுளில் தேடி பாடலை கண்டறிய முடியும். இதுவேளை செய்யாத போது, நீங்கள் Find Music By Lyrics அதாவது பாடல்களை லிரிக்ஸ் மூலம் தேடும் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

கமென்ட்கள்

நீங்கள் தேடுவதை போன்றே, மற்றவர்களும் நீங்கள் விரும்பும் பாடலை தேடலாம், பெரும்பாலும் தேடுவர். கமென்ட்ஸ் பகுதியில் நோட்டம் விடுவதால், நீங்கள் தேடும் பாடலின் பெயரை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை குறிப்பிட்ட வீடியோவின் கமென்ட்கள் அதிகமாக இருப்பின், Ctrl + F அல்லது மேக் பயன்படுத்துவோர் Command + F பட்டன்களை க்ளிக் செய்து தேடலாம்.

யூடியூப் கமென்ட்ஸ் சர்ச் எக்ஸ்டென்ஷன் கூகுள் க்ரோமில் கமென்ட்களின் மேலும் சர்ச் ஆப்ஷனை வழங்குகிறது. இங்கும் நீங்கள் பாடலின் சில குறியீட்டு வார்த்தைகளை டைப் செய்து தேடலாம்.

ஆப்

சவுன்டுஹவுன்டு மற்றும் ஷசாம் போன்ற சேவைகள் உங்களது பணியை முடித்துக் கொடுக்கும் என்றாலும், எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தி பாடல்களை தேடிக் கண்டுபிடிக்கலாம்.

ஷசாம்

இசையை கண்டறிவதில் சிறப்பான சேவையை வழங்குவதில் ஷசாம் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஷசாம் செயலியை போனில் இன்ஸ்டால் செய்து அதனை ஸ்பீக்கர்களின் அருகே சிறிது நேரம் வைக்க வேண்டும். அல்லது யூடியூப் மொபைல் செயலியில் உள்ள பாப்-அப் மோட் பயன்படுத்தலாம். இந்த அம்சங்கள் வேளை செய்யாத பட்சத்தில், ரெடிட் அல்லது ஃபேஸ்புக் மூலம் உங்களது தேடலை முயற்சிக்கலாம்.


Read More About: tech news Music video youtube
Have a great day!
Read more...

English Summary

How to find music and songs in YouTube videos: Read more about this in Tamil GizBot