ஏப்ரல் 15 வரை எந்த டிவியும் வாங்காதீங்க.. டால்பி அட்மாஸ்.. வருகிறது புதிய Xiaomi டிவிகள்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 (Xiaomi TV S Mini LED Series 2026) மாடல்களை இந்தியாவில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் என ஐந்து மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது சியோமி நிறுவனம். மேலும் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்களின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 அம்சங்கள் (Xiaomi TV S Mini LED Series 2026 specifications): 4கே டிஸ்பிளே உடன் இந்த புதிய சியோமி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் பிரைடன்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG), 94 சதவீதம் டிசிஐ பி3 கலர் உள்ளிட்ட பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இந்த புதிய சியோமி டிவி மாடல்களில் இருக்கும்.

அதேபோல் சியோமி அறிமுகம் செய்ய உள்ள 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் மாடல்கள் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) ஆதரவைக் கொண்டுள்ளன. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 85-இன்ச் மற்றும் 98-இன்ச் மாடல்கள் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த டிவிகள் மேம்பட்ட திரை அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த புதிய டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் வெளிவரும். ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கும்.
நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவிகளில் உள்ளன. ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) போன்ற அம்சங்களும் இந்த புதிய சியோமி மாடல்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் உடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவிகளில் பல்வேறு ஆடியோ அம்சங்களும் உள்ளன.
எச்டிஎம்ஐ போர்ட், வைஃபை 5, புளூடூத் 5.0, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த சியோமி டிவிகள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி டிவிகள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.


Click it and Unblock the Notifications








