சியோமி நிறுவனத்தின் இந்த டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.!


சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிகளவு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் டிவி மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும், காரணம் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட்
விலையில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படுகிறது.

Advertisement

ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்

தற்சமயம் இந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மி டிவி 4ஏ 32-இன்ச் மற்றும் 42-இன்ச் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒஎஸ் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Advertisement

அன்மையில் இந்நிறுவனம் மி டிவி 4ஏப்ரோ மற்றும் மி டிவி 4சி சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட் வழங்கியதைதொடர்ந்து தற்சமயம் மி டிவி 4ஏ மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 9பை அப்டேட் வசதியை வழங்கியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்

அதிகாரப்பூர்வ ட்விட்டர்

தற்சமயம் மி டிவி 4ஏ மாடலுக்கு வழங்கப்பட்ட ஆண்ட்ராய்டு 9பை அப்டேட் அதிகாரப்பூர்வ மி டிவி இந்தியா ட்விட்டர்பக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப், பிளே ஸ்டோர், ப்ளே மூவிஸ் மற்றும் பலவற்றைப் பார்க்கும்போது மொபைல் தரவு பயன்பாட்டைக் குறைக்க உதவும் Chromecast உள்ளமைக்கப்பட்ட, டேட்டா சேவரை இந்த புதுப்பிப்பு கொண்டு வருகிறது என்பதை இடுகைவெளிப்படுத்துகிறது.

ஆண்ட்ராய்டு 9பை அப்டேட் மூலம் மி டிவி பயனர்கள் Google Play Store, Google Assistant, Play Movies, Play Music மற்றும் உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவை அணுக முடியும். ஆனால் Mi TV 4A தொடர் தொலைக்காட்சிகள் BLEஐ ஆதரிக்காததால், நீங்கள் ஒரு புதிய ரிமோட்டை வாங்கினாலும் Google Assistant-ஐ பயன்படுத்தமுடியாது.

மி டிவி 4ஏ 32-இன்ச்

மி டிவி 4ஏ 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் 1366x768 எச்டி ரெசலூசன் உள்ளது. மேலும் இந்த மாடலில் 20W ஸ்பிக்கரும், 60Hz அவுட்புட்டும் கிடைக்கின்றது. மேலும் இந்த டிவியில் 3xHDMI, 2xயூஎஸ்பி மற்றும் ஒரு எதெர்நெட் போர்ட் ஆகியவையும் உண்டு. இந்த ஸ்மார்ட் டிவியில் ஸ்மார்ட் ரிமோட் மற்றும் வைஃபையும் உள்ளது. குவாட்கோர் பிராஸசர் மற்றும் 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் பவர் கொண்ட இந்த டிவியில் பேட்ச்வால் ஓஎஸ் இருப்பதால் ஆண்ட்ராய்டு சப்போர்ட் செய்யும் என்பதும் இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் வீடியோவைநேரடியாக பார்க்கலாம்.

Best Mobiles in India

English Summary

Xiaomi Mi TV 4A 32-Inch, 43-Inch start receiving Android 9 Pie update : Read more about this in Tamil GizBot