டிசம்பர்: நோக்கியா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!


இப்போது வந்த Digit வலைதளம் தகவலின் அடிப்படையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது வரும் டிசம்பர் மாதம் துவகத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகத்தை இந்திய மற்றும் உலக நாடுகள் இடையே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது,
குறிப்பாக இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி சேர்ந்து ஸமார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

Advertisement
55-இன்ச் டிஸ்பிளே

முன்பு வந்த தகவல்களின் அடிப்படையில் 55-இன்ச் டிஸ்பிளே மற்றும் 4கே யுஎச்டி ரெசல்யூசன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாகஅந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிட் வாட்ஸ் ஆப்., இல்லனா உங்க மெசேஜ், போட்டோ எல்லாம் லீக் ஆகும்- எச்சரிக்கை விடும் நபர்?

இந்திய தர நிர்ணய பணியகம்

இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த மென்பொருள் மற்றும் சேமிப்பு திறனுடன் வரும்.
குறிப்பாக இது பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய பணியகம்) சான்றிதழ் அளித்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்டிவியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு பை

டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி,தயாரிப்பில் உள்ள நோக்கியா ஸ்மார்ட் டிவி,ஆண்ட்ராய்டு பை-க்கு வெளியே இயங்க வாய்ப்புள்ளது. சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட் டிவிகளைப் போலவே, இதுவும் கூகிள் பிளே ஸ்டோருடன் முன்பே நிறுவப்பட்டிருப்பதாகவும்,சிறந்த மாறுபட்ட விகிதத்தை வழங்கும் நுண்ணறிவு டிம்மிங் போன்ற அம்சங்களுடன் வருவதாகவும் கூறப்படுகிறது.

பட்ஜெட் விலை

நோக்கியா அறிமுகப்படுத்தும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஒன்பிளஸ் டிவி, மோட்டோரோலா டிவி மற்றும் மி டிவி சாம்சங் டிவி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் நோக்கியா நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர்

நோக்கியா டிவி ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர் ஆதரகளுடன் வெளிவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Best Mobiles in India

English Summary

Nokia Smart TV Surfaced Online will launch on December via Flipkart : Read more about this in Tamil GizBot