Home
Gadgets

சும்மா சுத்தி சுத்தி அடிக்கும்: கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார் அறிமுகம்- விலையும் குறைவுதான்!

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார் இந்தியால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சவுண்ட்பார் சிஸ்டம் பல்வேறு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இந்த சவுண்ட்பார் டிவி, லேப்டாப் மற்றும் கேமிங் ஆடியோவை மேம்பட்ட அம்சத்தோடு வழங்குகிறது. இந்த கேமிங் சிஸ்டம் பெரிய அளவிலான சரவுண்ட் சவுண்ட் ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார்

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார்

சரவுண்ட் அதாவது விரிவான சத்தத்தை சரவுண்டிங் அம்சத்தோடு வழங்குகிறது. டவர் ஸ்பீக்கர் இரண்டு தனிப்பயனாக்கப்பட்ட டியூன் செய்யப்பட்ட அம்சங்களோடு வருகிறது. இது துல்லியமான சரவுண்டிங் சத்தத்தை அளிக்க அனுமதிக்கிறது. அதோடு டிவி, லேப்டாப், மொபைல் போன்கள் மற்றும் கேமிங் அம்சங்களை பலவகையில் இந்த சரவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்க முடியும் என நிறுவனம் கூறுகிறது.

ரூ.9,999 என்ற சிறப்பு வெளியீட்டு விலை

ரூ.9,999 என்ற சிறப்பு வெளியீட்டு விலை

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார் டிசம்பர் நடுப்பகுதியில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக ரூ.9,999 என்ற சிறப்பு வெளியீட்டு விலையில் கிடைக்கிறது. இந்த சிறப்பு வெளியீட்டு விலை முடிந்தபிறகு இதன் விலை ரூ.17,999 ஆக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. சிறப்பு வெளியீட்டு விலை குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி 2: அம்சங்கள்

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி 2: அம்சங்கள்

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி 2 சவுண்ட்பார் இரண்டு தனிப்பயன் டியூன் செய்யப்பட்ட அம்சங்களோடு வருகிறது. இதன் மூலம் சத்தத்தை பிரித்து வழங்க முடியும். இந்த சரவுண்ட் சிஸ்டத்தின் அம்சங்கள் உரையாடல், ஆடியோ, இசை உள்ளிட்டவற்றை தனித்தனியாக பிரித்து வழங்க அனுமதிக்கும். இதில் 2.25-இன்ச் டிரைவர்கள் இருக்கிறது. கூடுதலாக, துப்பாக்கி சூட்டு போன்ற சத்தத்தை ஆதரிக்கும் சப்வூபர் இருக்கிறது. இது அதிகபட்சமாக 160W வரை சத்தத்தை வழங்குகிறது என கூறப்படுகிறது. சத்தத்தை பிரித்து தனிதனியாக சரவுண்டிங் முறையில் இந்த சரவுண்ட் பார் சிஸ்டம் வழங்குகிறது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார் 55 ஹெட்ஸ் முதல் 20கே ஹெர்ட்ஸ் வரை சத்த வரம்பை வழங்குகிறது. இந்த சவுண்ட்பாரில் டிவிகளோடு இணைக்கும் டிவி ஏஆர்சி, ஆப்டிக்கல், ஏயூஎக்ஸ், ப்ளூடுத் வி5.0 மற்றும் யூஎஸ்பி ஆடியோ ஸ்ட்ரீமிங் அம்சம் இருக்கிறது. இது பிஎஸ்4 வகைகளை ஆதரிக்கும் நிண்டென்டோ ஸ்விட்சை கொண்டுள்ளது.

3.3 கிலோ எடை கொண்ட சப்வூபர்

3.3 கிலோ எடை கொண்ட சப்வூபர்

கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார் சிஸ்டத்தை ரிமோட் கண்ட்ரோலர் மூலம் அணுகலாம். 2 கிலோ எடை கொண்டதாக இந்த சவுண்ட்பார் உள்ளது. அதோடு இதன் சப்வூபர் 3.3 கிலோ எடை கொண்டதாக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Creative Stage V2 Soundbar Launched in India With SubWoofer and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X