ஸ்மார்ட் காண்டம் முதல் இயந்திர தேனீக்கள் வரை! இது 2019 தானா? இல்லை 3019 ஆ?

இப்படியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் மற்றும் இப்போது இருக்கும் நிலைமையை ஒப்பீட்டு பார்த்தாலே நாம் எங்கோயோ போய்விட்டது போல் இருக்கும்.


வெறும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலாக, நாம் அனைவரும் நமது மொபைல் போன்கள் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகளோடு முற்றிலும் நன்றாக இருந்தோம். இன்னும் சொல்லப்போனால் நாம் நம் கைப்பட சில கடிதங்களை எழுதி அனுப்பும் பழக்கத்தையும் கொண்டு இருந்தோம். ஆனால் இப்போது இருக்கும் நிலைமையோ நேர் தலைகீழ்!

Advertisement

நமக்கு ஏராளமான ஆப்ஸ் கிடைத்து விட்டது, டிஜிட்டல் வழியிலான பணபரிமாற்றங்கள் நிகழ்கிறது, எல்லாவற்றிக்கும் மேலாக நமது ஸ்மார்ட்போன்களில் கேமரா வேறு உள்ளது. இப்படியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் மற்றும் இப்போது இருக்கும் நிலைமையை ஒப்பீட்டு பார்த்தாலே நாம் எங்கோயோ போய்விட்டது போல் இருக்கும். இருந்தாலும் கூட சில அறிவியலாளர்களும், பொறியியலாளர்களும் எதையும் நிறுத்திக் கொள்வதாய் இல்லை. தொடர்ந்து கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே தான் உள்ளனர். மற்றும் அந்த கண்டுபிடிப்புகள் நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியாக. "அடேங்கப்பா... இது 2019 அம ஆண்டா/ அல்லது 3019 ஆம் ஆண்டா?" என்று நம் வாயை பிளக்க வைக்கும் கண்டுபிடிப்புகளின் தொகுப்பே ஐந்தே கட்டுரை!

Advertisement

1. சுயமாக சுத்தம் செய்து கொள்ளும் பூனைகளுக்கான கழிப்பறை!

சோம்பேறியான (அல்லது மிகவும் முற்போக்கான) பூனை உரிமையாளர்கள் ஏற்கனவே தங்கள் செல்லப்பிராணிகளுக்கான இந்த தானியங்கி பூனை கழிப்பறைகளை வாங்கியுள்ளனர். இந்த சாதனத்தில் உள்ள ரோபோ லிட்டர் பாக்ஸிற்கு, எப்படி கழிவுகளை ஒரு தனித்தனி பெட்டிக்குள் சேகரிக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். இதை வைத்துள்ளவர்கள், வெறுமனே அதைத் திறக்க வேண்டும், மேலும் முழு பையை அகற்ற வேண்டும், பின்னர் தூக்கி எறிய வேண்டும், அவ்வள்வு தான். இந்த "ஸ்மார்ட் லிட்டர் பாக்ஸின்" விலை என்ன தெரியுமா ? - 450 அமெரிக்க டாலர்கள்!

2. ஸ்மார்ட்டஸ்ட் ஹூப்

சில தனிப்பட்ட மற்றும் சிறப்பு கேஜெட்டுகள் இல்லாமல் இந்த 21 ஆம் நூற்றாண்டில்விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகளை கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாக மாறி விட்டது. இதை "ஸ்போர்ட்ஸ் ட்ராக்கிங்கை" மேலும் ஒரு மேலே கொண்டு செல்லும் முனைப்பில் கீழ், யுனைடெட் ஸ்டேட்ஸின் ஆர்வலர்கள் ஹூப்பில் சென்சார்களை நிறுவியுள்ளனர், அதற்கு விஹூப் (VHOOP) என்றும் பெயரிட்டு உள்ளனர். இந்த ஸ்மார்ட் ஹூலா ஹூப் ஆனது உங்கள் உடல் இயக்கத்தின் தீவிரத்தை கண்காணிக்கும் மற்றும் அது சார்ந்த முடிவுகளை உங்கள் ஸ்மார்ட்போனிற்கு அனுப்பி வைக்கும்.

03. ஸ்மார்ட் காண்டம்!

சமீபத்தில், பிரிட்டிஷ் ஆணுறை நிறுவனம் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டது, அதில் ஐ.காண் (i.Con) என்றழைக்கப்படும் ஒரு "ஸ்மார்ட் ஆணுறையும்" அடங்கும். பார்க்க இதுவொரு பிட்னஸ் ப்ரேஸ்லேட் போர்னு காட்சி அளிக்கும் ஆனால் இது உடலின் வேறொரு பகுதிக்குள் நுழைந்து, வேறு சில நடவடிக்கைகளை கண்காணித்து அளவிடும் ஒரு பொருள் ஆகும். நிச்சயமாக இந்த ஸ்மார்ட் காண்டம் வழக்கமான காண்டம்கள் செய்யும் கர்ப்பத்தை தவிர்ப்பது அல்லது நோய் பரவுதலை தடுப்பது போன்ற காரியங்களோடு சேர்த்து உடலுறவின் போது - தீவிரம் மற்றும் வேகம், மிகவும் பிரபலமான நிலைகள் மற்றும் அவற்றின் அதிர்வெண், உறுப்புகளின் வெப்பநிலை மற்றும் எரியும் கலோரிகளின் அளவு ஆகியவற்றைச் சுற்றியுள்ள செயற்பாடுகளை கண்காணிக்கும். பயனர்கள் விரும்பினால், அவர்களது சாதனைகளை மற்ற பயனர்களுடன் மேடையில் பகிர்ந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. தானாக நகரும் பெட்டி

அடிக்கடி பயணம் செய்யும் நபர்கள் விமான பயணம் இல்லாத ஒரு பயணத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அதை நன்கு புரிந்து கொண்ட பார்வேர்ட்எக்ஸ் (ForwardX) நிறுவனம் தனது உரிமையாளரைப் பின்தொடரும் சிறப்பு பெட்டகத்தை கண்டுபிடித்தது. இதைப் பயன்படுத்த, நீங்கள் எந்த ஜாய்ஸ்டிக்களையோ அல்லது கடினமான கட்டளைகளையோ நிகழ்த்த தேவையில்லை. அது ஒரு ஸ்மார்ட் ப்ரேஸ்லெட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும், அதை வெறுமனே கையில் மாட்டிக்கொண்டால் போதும். அந்த சூட்கேஸ் உங்களை பின் தொடரும். இது தற்போது வெகுஜன உற்பத்தியில் இல்லை என்பதும், இதன் விலை விவரம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. ரோபோ தேனீக்கள்

வால்மார்ட் நிறுவனம் "பிளாக் மிரர்" தொலைக்காட்சி தொடரின் எபிசோடுகளில் ஒன்றைப் போலவே ரோபோ தேனீக்களை உருவாக்குவதற்கான ஒரு காப்புரிமைக்காக விண்ணப்பித்தது. பொறியாளர்களைப் பொறுத்தவரை, இந்த தேனீ ட்ரோன்கள் ஆனது, தேன் தயாரிப்பதைத் தவிர்த்து, தேனீக்களின் அனைத்து செயல்பாடுகளையும் செய்யும் திறனை கொண்டிருக்கும். எதிர்காலத்தில், இவ்வகை ரோபோ தேனீக்கள் ஆனது தாவரங்களையும் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்தை பாதுகாக்கவும், உருவாக்கவும் உதவினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

6. ஸ்மார்ட் ஹைவ்

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் வணிகர் ஒருவர் ஒரு சிறப்பான தேன்கூடு ஒன்றிற்கான காப்புரிமையை பெற்றார். பறவைகளின் கூடு போன்று காட்சி அளிக்கும் அந்த அமைப்பானது மிகவும் எளிதானது, அது தேனீக்களுக்கு இடம் அளிப்பது மட்டுமன்றி தேனை உறிஞ்சி எடுப்பதற்கும் வழிவகை செய்து கொடுக்கும். தற்போது இவ்வகை தேன் கூடுகளின் புதிய மேம்படுத்தப்பட்ட மாதிரியைத் தொடங்குவதற்கான மூலதனத்தைப் பெறுவதற்காக தொழிலதிபர்கள் செயலாற்றி வருகின்றனர்.

7.கழிப்பறைக்கான இரவு விளக்கு

சில கண்டுபிடிப்புகள் ஆனது, "எவன்டா இதை கண்டுபிடித்தது?" என்று கேட்க வைக்கும். அப்படியான ஒரு கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் இலுமினிபவுல் (IllumiBowl). இதுவொரு எளிய மின் விளக்கு ஆகும். இது கழிப்பறை விளிம்பில் நிறுவப்பட்டு, அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சமமாக வெளிச்சத்தை பரப்பும் வேலையை செய்கிறது, குறிப்பாக இரவில். நீங்கள் கழிப்பறைக்குப் போகும் ஒவ்வொரு முறையும் லைட்டை ஆன் செய்ய வேண்டியதில்லை என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

8. கையடக்க ஸ்பெக்ட்ரோமீட்டர் ஸ்கேனர்

நீங்கள் உங்களை சுற்றி உள்ள ஆரோக்கியமான உணவு மற்றும் சுற்றுச்சூழல் பற்றி கவலை கொள்பவர் என்றால், இந்த பாக்கெட் ஸ்கேனர் லின்க்ஸ்கொயர் (LinkSquare) நிச்சயமாக உங்களுக்கானது தான். இந்த சாதனம் ஆனது, உணவுகள், திரவங்கள் மற்றும் பிற பொருட்கள் ஆரோக்கியமானதாக மற்றும் புதிதாக இருக்கிறதா என்பதை ஆராய உதவும். குறிப்பாக ஷாப்பிங் செய்யும் போது, ​​அல்லது பயணம் செய்யும் போது இது மிகவும் வசதியானதாக இருக்கும். கூடிய விரைவில் இந்த சாதனம் நம் ஸ்மார்ட்போன்களில் நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

9.குறட்டையை சரிசெய்யும் ஐ மாஸ்க்!

ஒரு சீன நிறுவனமான விவிஃபிளை (VVFLY) நீண்ட காலமாக மனித தூக்கத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்து வரும் ஒரு நிறுவனம் ஆகும். அந்த ஆய்வின் முடிவில், நிறுவனத்தின் டெவலப்பர்கள் ஒரு கேஜெட்டை உருவாக்க முயற்சித்தார்கள், அது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, சிறுநீரக பிரச்சினையையும் தீர்க்குமாம். தயாரிப்பாளர் படி, சிறப்பு அதிர்வுகளை வெளிக்கிடும் இந்த ஸ்மார்ட் ஐ மாஸ்க் ஆனது சுவாசத்தை சாதாரணப்படுத்தவும் உதவுமாம், அதாவது குறட்டை விடுவதை குணப்படுத்துமாம். இதுவும் இப்போது வரையிலாக வெகுஜன உற்பத்தியை சந்திக்கவில்லை.

10. உரையாடல்களை இரகசியமாக்கும் ஒரு முகமூடி

விசித்திரமாக காட்சி அளிக்கும் இந்த சாதனத்தின் பெயர் ஹஷ்மீ ஆகும். இது ஒரு மிக முக்கியமான நோக்கத்திற்காக உருவகம் பெற்று உள்ளது. தொலைபேசியோடு இணைக்கப்படும் இந்த சாதனம் ஆனது நீங்கள் இரகசியமாக பேச விரும்பும் அனைத்தையும், எந்தவொரு இடத்தில் இருந்தபடியும் பேச அனுமதிக்கும். சிலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.

Best Mobiles in India

English Summary

10 Gadgets That Will Bring You Directly Into 3019 : Read more about this in Tamil GizBot