வாட்ஸ்அப் இல் களமிறங்கும் அட்டகாசமான புதிய சேவை என்னவென்று தெரியுமா?


வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் பல்வேறு புதிய மாற்றங்களைத் தனது வாட்ஸ்அப் தளத்தில் மேற்கொண்டு வருகிறது. பல புதிய அப்டேட்களை கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. அப்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது ஒரு அட்டகாசமான புதிய சேவையைச் சோதனை செய்து வருகிறது.

Advertisement

ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.19.348

வாட்ஸ்அப் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.348 இல் டெலீட் மெசேஜ் என்று புதிய அம்சத்தை அறிமுகம் செய்து சோதனை செய்து வருகிறது. WABetaInfo தளத்தில் இந்த அம்சம் குறித்த லீக்-கள் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் டெலீட் மெசேஜ் சேவை குறித்த தகவல்களை ஆதாரத்துடன் வாபீட்டாஇன்ஃபோ வெளியிட்டுள்ளது.

Advertisement
டிசப்பியரிங் மெசேஜஸ் இல்லை டெலீட் மெசேஜஸ்

டிசப்பியரிங் மெசேஜஸ் (Disappearing messages) என்கிற பழைய பெயர்கொண்ட அதே அம்சம் தான் இப்பொழுது புதிய சில மாற்றங்களுடன் டெலீட் மெசேஜஸ் (Delete Messages) என்கிற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த சேவை கூகுள் பிளே பீட்டா ஸ்டோர் தளத்தில் பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது.

மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ.! முழுவிவரங்கள்.!

டெலீட் செய்ய கால அவகாசம்

டெலீட் மெசேஜஸ் சேவையின்படி, நீங்கள் வாட்ஸ்அப் இல் அனுப்பும் மெசேஜ்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாக டெலீட் ஆகிக்கொள்ளும். டெலீட் மெசேஜஸ் சேவையின் கீழ் உங்களுடைய மெசேஜ்கள் எத்தனை காலத்திற்கு டெலீட் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

எவ்வளவு நேரம் என்று தெரியுமா?

இதற்கு முன்பு டிசப்பியரிங் மெசேஜஸ் என்கிற பெயரில் இந்த சேவை சோதனை செய்யப்பட்ட பொழுது 5 வினாடி முதல் 1 மணி நேரம் வரை, மெசேஜ்கள் டெலீட் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெலீட் மெசேஜஸ் சேவையின் கீழ், 1 மணி நேரம் முதல் 1 ஆண்டு காலம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உஷார்: இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்

டார்க் மோடிலும் சோதனை

இந்த புதிய டெலீட் மெசேஜஸ் சேவை தற்பொழுது சோதனையில் உள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் சேவை டார்க் மோடிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த அம்சத்துடன் டார்க் மோடு அம்சமும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English Summary

WhatsApp Will Soon Let You Send Disappearing Messages : Read more about this in Tamil GizBot