வாட்ஸ்ஆப் பே சேவைக்கு இந்தியாவில் தடையா? காரணம் இதுதான்!


வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளைக் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் அனைத்து அம்சங்களும் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிற விதத்தில் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சோதனையில் உள்ள வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்

அதன்படி ஏற்கெனவே சோதனையில் உள்ள ஒரு அப்டேட் தான் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ். குறிப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் பே சர்வீஸ், பேடிஎம் மறறும் கூகுள் போல செயல்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தற்பொழுது வாட்ஸ்ஆப் தனது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து வருகிறது.

Advertisement
ரிசர்வ் வங்கி முடக்கம் செய்ய முடிவு

பின்பு கடந்த ஒரு வருடங்களாகச் சோதனை முயற்சியில் இருக்கும் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது வாட்ஸ்ஆப் பே சேவைக்கு ரிசர்வ் வங்கி முடக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திராயன் 2 செயல்படாததற்கு வடகொரியா ஹாக்கர்கள் காரணமா? உண்மை இதுதான்!

நிபந்தனைகளை சரியாக செய்யாத வாட்ஸ்ஆப்

முன்பே வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி சில நிபந்தனைகளை விதித்திருந்தது. குறிப்பாகப் பயனர்களின் பண பரிவதனை தகவல்களை இந்தியாவிற்குள் தான் கட்டாயம் சேமித்து வைக்க வேண்டுமென்று உறுதிப்படத் தெரிவித்திருந்தது. ஆனால் வாட்ஸ்ஆப் நிறுவனம் அதைச் சரியாக செய்தது போல் தெரியவில்லை.

ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

தடை விதிக்கப்படலாம்

இதுவரை மாதம் சுமார் மில்லியன் பரிவர்த்தனைகளை வாட்ஸ்ஆப் பே சேவை தனது பீட்டா வெர்ஷனில் செய்து வருகிறது. இருப்பினும் உச்சநீதிமன்றம் உள்நாட்டு டேட்டா சேமிப்பு தொடர்பான தகவலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனம் அனைத்து தகவல்களையும் இந்தியாவில் சேமிக்கவில்லை என்பதனால் இந்த சேவைக்குத் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English Summary

WhatsApp Pay May Not Go Live In India : Read more about this in Tamil GizBot