வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய கேட்லாக்ஸ் சேவை!


வாட்ஸ் அப் நிறுவனம், சிறு வர்த்தக நிறுவனங்களுக்கான 'வாட்ஸ் அப் பிஸ்னஸ்' செயலியில், 'கேட்லாக்ஸ்' ('Catalogs') என்னும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப் பிஸ்னஸ் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கேட்லாக்ஸ் சேவை, வாடிக்கையாளர்கள் எளிதாகப் பார்க்கக் கூடிய வகையில், பல்வேறு பொருட்களின் புகைப்படங்களை இடம்பெறச் செய்து புதிய வசதியை உருவாகியுள்ளது.

இந்த புதிய கேட்லாக்ஸ் சேவை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள், சேவைகளைக் காட்சிப்படுத்துவதற்கான மொபைல் விற்பனை மையம் போல இந்த தளம் செயல்படும். மக்கள் தங்களுக்குத் தேவையானதைக் கண்டறிய உதவும் வகையில் கேட்லாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?

இதற்கு முன், நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் புகைப்படங்களை ஒன்றின் பின் ஒன்றாக வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டியது இருக்கும். ஆனால் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேட்லாக்ஸ் முறைப்படி, வாடிக்கையாளர்கள் அவற்றை கேட்லாக்ஸ்காகவே அணுகிக்கொள்ளலாம்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

இந்தியா, இந்தோனேசியா, பிரேசில், ஜெர்மனி, மெக்சிகோ, யூ.கே. அமெரிக்கா ஆகிய நாடுகளில் தற்பொழுது இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் வாட்ஸ் அப் பிஸினஸ் செயலியை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை அணுகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles

Best Mobiles in India

Have a great day!
Read more...

English Summary

Whatsapp Introduces New Catalogues Feature in Whatsapp Bussiness : Read more about this in Tamil GizBot