டிவிட்டர் தளத்தில் வந்தது புத்தம் புதிய அம்சம்.! என்ன தெரியுமா?


டிவிட்டரில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி டிவிட்டர் தளத்தில் கமென்ட்களை மறைக்க செய்யும் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் தற்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

ஹைட் ரிப்ளைஸ்

குறிப்பாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சோதனை செய்யப்பட்டு வந்த ஹைட் ரிப்ளைஸ் அம்சம் இப்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. பின்பு இப்போது ஹைட் ரிப்ளைஸ் அம்சம் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் ட்வீட்களில் உள்ளே கிரே நிற ஐகானை கிளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும்.

Advertisement
ஃபாளோவர்கள் மட்டுமே பார்க்க முடியும்

இப்போது வந்துள்ள இந்த புதிய அம்சத்தை கொண்ட பயனர்கள் எதிர்மறை கருத்துகளை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். ஆனாலும் மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை கிளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு இப்படியொரு அபாயம் உள்ளதா?

டிவிட்டர் நிறுவனம்

இந்த அம்சம்ட்விட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்கள் வழிசெய்யும் எனவும், பின்பு இந்த அம்சம் வழங்கப்பட்டசில மணி நேரத்திலேயே ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்க செய்யப்படுவதாக டிவிட்டர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்மறை தகவல்கள்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் டிவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்கள் கேலி, கிண்டல்கள், போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருகின்றன. இதுபோன்ற இன்னல்களை டிவிட்டரில் குறைக்கும் நோக்கில் இந்த புதி அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

டார்க் மோட் தீம்

இதற்குமுன்பு டிவிட்டர் நிறுவனம் டார்க் மோட் தீம் அம்சத்தை அதன் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கிவந்தது,பின்பு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும வழங்கியது. குறிப்பாக இந்த டிவிட்டர் தளத்தின் டார்க் மோட் தீம் ஆனது லைட்ஸ் அவுட் என்று அழைக்கப்படுகிறது. இந்த லைட்ஸ் அவுட் ஆனது மற்ற தளங்களில் இருக்கும டார்க் மோட் போல் அல்ல, இது டார்க் மோட் தீம் ஆகும்

சேமிக்க உதவும்

பின்பு டிவிட்டர் அமைப்பு தெரிவித்தது என்னவென்றால், தற்போது வரை அண்ட்ராய்டு டிவிட்டர் ஆப்பின் ஆல்பா வெர்ஷன் வழியாக மட்டுமே இது டார்க் மோட் தீம் அணுக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த லைட்ஸ் அவுட் தீம் பற்றி எளிமையாக சொல்லவேண்டும்என்றால், டார்க் மோடை விட சற்று வித்தயசமானது. பின்பு இந்த லைட்ஸ் அவுட் தீம் ஒஎல்இடி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை
பயன்படுத்தும் பயனர்களுக்கு அருமையாக வேலை செய்கிறது. குறிப்பாக லைட்ஸ் அவுட் தீம் யூஸர் இன்டர்பேஸை அடர் நீலம் அல்லதுஅடர் சாம்பல் நிறத்திற்கு மாற்றுவதற்கு பதிலாக அடர் கருப்பு நிறமாக மாற்றுகிறது. கண்டிப்பாக அதிகளவு பேட்டரியை சேமிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English Summary

Twitter now lets you hide replies to your tweets : Read more about this in Tamil GizBot