Home
Apps

ஒரு குடும்பம் ஒரு WhatsApp எண்.. இப்படி ஒரு அப்டேட்ட யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க!

சென்னையில் இருக்கும் ஒருவரும் கோயம்புத்தூரில் இருக்கும் ஒருவரும் ஒரே வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணை இரண்டு மொபைல்களில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதுவே மாஸ் அப்டேட் என்றால், ஒரே அக்கவுண்டில் நான்கு பேர் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தோ அல்லது வெவ்வேறு மாநிலங்களில் இருந்தோ வாட்ஸ்அப்பை பயன்படுத்தினால் எப்படி இருக்கும்.

அப்படியான அப்டேட்டை தான் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த புது அப்டேட் மூலம் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் அவர்கள் அனைவரும் ஒரேயொரு வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தி நான்கு மொபைல்களிலும் லாகின் செய்து கொள்ள முடியும். இந்த அசத்தலான அப்டேட்டை மெட்டா (Meta) நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு குடும்பம் ஒரு WhatsApp எண்.. எப்படி யூஸ் பண்ணலாம்?

ஃபேஸ்புக் (Facebook), ட்விட்டர் (Twitter), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற ஆப்ஸ்களின் பயன்பாடு அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டன. நமது நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ பகிர்ந்து கொள்ள விரும்பும் மெசேஜ்களையும், போட்டோக்களையும், வீடியோக்களையும் இந்த சோசியல் மீடியா ஆப்ஸ்கள் (Social Media Apps) மூலம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும். இந்த வரிசையில் வாட்ஸ்அப் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது.

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 90 கோடி பயனர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. இதனால் பயனர்களின் தேவைக்கேற்ப ஏற்ப அவ்வப்போது புதுப்புது அப்டேட்களையும் வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. இதுவரை ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை வைத்து இரண்டு டிவைஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அதாவது, வாட்ஸ்ப் வெப் கியூஆர் கோட் (WhatsApp Web QR Code) பயன்படுத்தி டெஸ்க்டாப்பிலோ அல்லது லேப்டாப்பிலோ நீங்கள் லாகின் செய்திருக்காலம்.

இந்த டிவைஸ்களின் எண்ணிக்கையை மெட்டா நிறுவனம் அதிகரிக்க வேண்டும் என்று பயனர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை மெட்டா நிறுவனம் இப்போது நிறைவேற்றி இருக்கிறது. ஒரு மாஸான அப்டேட்டை தனது பயனர்களுக்கு அறிவித்திருக்கிறது.‌ இந்த அப்டேட் மூலம் ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி நான்கு டிவைஸ்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நான்கு டிவைஸ்களிலும் சாட்டிங், வாய்ஸ் & வீடியோ காலிங், மீடியா ஷேரிங் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்துமே எண்-டு-எண்ட் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என்று மெட்டா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு கியூஆர் கோடை பயன்படுத்த தேவையில்லை. உங்களது அக்கவுண்ட் நம்பரை கொண்டு லாகின் செய்து கொள்ளலாம்.

அதற்கு ஓடிசி (OTC (OneTime Code)) மட்டுமே தேவைப்படும். இப்படி நான்கு டிவைஸ்களிலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் போது, உங்களின் பிரைமரி டிவைஸ் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லை என்றால், மற்ற டிவைஸ்களில் தானாகவே வாட்ஸ்அப் லாக்-அவுட் ஆகிவிடும். வழக்கம்போல் மீண்டும் ஓடிசி கொடுத்து லாகின் செய்து கொள்ளலாம். வரும் நாட்களில், இந்த டிவைஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அப்டேட் வணிக ரீதியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனர்களிடம் நல்லா வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில், இந்த புதிய அப்டேட் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஏற்கனவே கியூஆர் கோட் மூலம் பயன்படுத்தப்படும் வாட்ஸ் வெப் அம்சமும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Meta announced one WhatsApp multiple phones feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X