Google Pay போதும்! 2 நிமிடங்களில் ரூ.25 ஆயிரம் கடன்! எப்படி பெறுவது?
உங்களின் அவசர தேவைக்கு பணம் வேண்டுமானால், அடையாளம் தெரியாத லோன் ஆப்களை நம்ப வேண்டாம். கூகுள் பே (Google Pay) ஆப்பில் இருந்தே ரூ.25 ஆயிரம் லோன் வாங்கிக்கொள்ள முடியும். இதற்கு 2 நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும். இதுகுறித்த விவரங்கள் இதோ.
இந்தியாவில் மிகப்பெரும் வங்கிகள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் சேவையை செய்து வந்தன. இதுபோன்ற வங்கிகளில், தனிநபர் லோன் வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. லோனுக்கு அப்ளை செய்துவிட்டு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதற்குள் லோனே வேண்டாம் என்ற நிலைக்கே பலர் சென்றுவிடுவார்கள்.

இப்படிப்பட்ட காலம், இப்போது மலையேறி போய்விட்டது. தனியார் நிதி நிறுவனங்கள் முதல் சர்வதேச நிறுவங்கள் வரையில் தனிநபர் லோன் வழங்க தொடங்கிவிட்டன. இந்த லோன்ஆப்கள் (Loan Apps) மூலமும் ஆன்லைன் (Online Loan) மூலமும் எளிதாக வழங்கப்படுகிறது. இப்படி உடனடியாகவும், எளிதாகவும் கிடைப்பதால் அவசர தேவைகளுக்கு மக்களும், வாங்கி வருகின்றனர்.
இந்த வரிசையில் 2 நிமிடங்களில் ரூ.25 ஆயிரம் வரையில் கடன் வழங்கும் சேவையை இன்ஸ்டாமணி ஆப் (InstaMoney App) செய்துவருகிறது. பொதுவாக லோன்கள் வழங்கும் நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றுள்ளதா, அதன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுள்ளதா என்பதை லோன் வாங்கும் நபர்கள் முன்கூட்டியே கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த இன்ஸ்டாமணி ஆப், அப்படி அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் மூலம் கூகுள் பே (Google Pay) ஆப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஆகவே, இப்போது கூகுள் பே வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ரூ.25 ஆயிரம் கடனை 2 நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த லோனுக்கு எப்படி அப்ளை செய்வது என்பது குறித்த விவரங்கள் பின்வருமாறு.
முதலில் கூகுள் பே ஆப்பை ஓப்பன் செய்து, கீழே பிசினஸ் (Businesses) பக்கத்துக்கு செல்ல வேண்டும். அதன்பின் எக்ஸ்ப்ளோர் (Explore) டேப்பை கிளிக் செய்த உடன், இன்ஸ்டாமணி ஆப்பின் லோகோ தேன்றும், அதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது, லோனை எப்படி பெற வேண்டும் என்பது குறித்த குறுகிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதைப்படித்து விட்டு, கீழே இருக்கும், விவ்யூ மை லோன் (VIEW MY LOAN) டேப்பை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்களது, கூகுள் அக்கவுண்ட் விவரங்களை அங்கு கொடுத்து, உள் நுழைந்த உடன், லோனுக்கு தேவையான விவரங்கள் கேட்கப்படும். இதையெல்லாம் கொடுத்தப்பின்பு, கேஓய்சி (KYC) பக்கம் தோன்றும், அதையும் முடித்துவிட்டால், உங்களுக்கு எவ்வளவு லோன் வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்படும். இதையடுத்து கெட் லோன் (Get Loan) கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு 2 நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும் என்று இன்ஸ்டாமணி ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








