TikTok க்கு மறைமுகமாக உதவிய Google! பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா?


டிக்டாக் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது, சீன வீடியோ தயாரிக்கும் பயன்பாடான டிக்டாக் கடந்த சில வாரங்களாகக் கடுமையான சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. டிக்டாக் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு புதிய ஹேஷ்டேக்குகள் மற்றும் டிக்டாக்கிற்கு எதிராக ட்வீட்கள் இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. டிக்டாக் பயன்பாட்டை மதிப்பைக் குறைக்க இந்தியர்கள் இதுவரை 22 மில்லியன் மதிப்புரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

Advertisement

டிக்டாக்கின் பிளே ஸ்டோர் தரவரிசை சரிந்தது

டிக்டாக்கின் பிளே ஸ்டோர் தரவரிசை 4 நட்சத்திரங்களிலிருந்து 2 நட்சத்திரங்களாக இந்த வாரத்தின் துவக்கத்தில் சரிந்தது, பின்னர் இது மேலும் 1.2 நட்சத்திரங்களாக தற்பொழுது சரிந்துள்ளது. டிக்டோக் தரவரிசை எப்போதும் இருப்பதை விடப் பல மடங்கு சரிந்து மோசமான நிலையை எட்டியுள்ளது.

Advertisement
போலி கணக்குகள் உருவாக்கி போலி மதிப்புரை

இதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் தான் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் உருவான டிக்டாக் VS யூடியூப் சர்ச்சையால், டிக்டாக் பயன்பாட்டின்மதிப்புரையை குறைத்துவழங்குவதற்காகவே பல மில்லியன்போலிக் கணக்குகளைகூகிளில் இந்தியர்கள் உருவாக்கி, அதன் மூலம் டிக்டாக் தலத்தில் மதிப்புரையை குறைத்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!

5 மில்லியன் மதிப்புரை கமெண்ட்களை நீக்கிய கூகிள்

இந்த அவலநிலையைச் சமாளித்து கூகிள் பிளே ஸ்டோரில் டிக்டாக் தளத்திற்கு உதவும் முயற்சியில் கூகிள் நிறுவனம் சுமார் 5 மில்லியன் மதிப்புரை கமெண்ட்களை டிக்டாக் பதிவிலிருந்து நீக்கம் செய்துள்ளது. அதன் விளைவாக தற்பொழுது டிக்டாக் பயன்பாட்டின் தரவரிசை 22 மில்லியன் பயனர் மதிப்புரைகளுடன் 1.5 நட்சத்திரங்களை எட்டியுள்ளது.

1.2 நட்சத்திரங்கள் வரை சரிந்த டிக்டாக்

டிக்டாக் பயன்பாட்டிற்கு சில சமநிலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் கூகிள் நிறுவனம் பயனர்களின் சில மதிப்புரைகளை நீக்கியதாகத் தெரிகிறது. டிவிட்டர் பயனரும் தரவுக் கதைசொல்லியுமான நோபர்ட் எலெக்ஸ் சமீபத்தில் ஒரு ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, "கூகிள் ஒரே இரவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிக்டாக் மதிப்புரைகளை நீக்கியது, அதனால் தற்பொழுது டிக்டாக்கின் மதிப்பீடு 1.2 முதல் 1.6 நட்சத்திரங்களாக அதிகரித்துள்ளது."

28 மில்லியன் மதிப்புரைகள்

அவரது ட்வீட் உடன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் பதிவுடன் பகிர்ந்துள்ளார். இதில் பிளேஸ்டோர் டிக்டாக் பயணப்ட்டின் கீழ் 28 மில்லியன் மதிப்புரைகளைக் காட்டுகிறது மற்றும் மதிப்பீடு 1.2 நட்சத்திரங்கள் என்று காட்டுகிறது. கூகிள் பல மில்லியன் மதிப்புரைகளை நீக்கம் செய்த பின் மற்றொரு ஸ்கிரீன் ஷாட்டில் 1.6 நட்சத்திரங்களுடன் 27 மில்லியன் மதிப்புரைகளைக் காட்டுகிறது.

விலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி மீண்டும் அதிரடி.!

டிக்டாக் பயன்பாட்டின் தரவரிசை மேம்பட்டுள்ளது

இன்றைய நிலவரப்படி, பிளேஸ்டோர் டிக்டாக் பயன்பாட்டிற்கான 22 மில்லியன் மதிப்புரைகளைக் காட்டுகிறது, மேலும் 1.5 நட்சத்திரங்களை இது கொண்டுள்ளது. இதன் பொருள், கடந்த வாரத்திலிருந்து, கூகிள் நிறுவனம் சுமார் ஐந்து மில்லியன் பயனர் மதிப்புரைகளை நீக்கியுள்ளது. இருப்பினும், இந்த மதிப்புரைகளை அகற்றுவதற்கான காரணத்தைக் கூகிள் கூறவில்லை, இருப்பினும் டிக்டாக் பயன்பாட்டின் தரவரிசை மேம்பட்டுள்ளது.

Best Mobiles in India

English Summary

Google removes over 5 million reviews from TikTok Rating In Play Store : Read more about this in Tamil GizBot