இலவச ICC T20 World Cup 2024 சேனல்கள்: இந்தியாவில் எந்த சேனல் வேர்ல்ட் கப் பார்க்க பெஸ்ட்? லிஸ்ட் இதோ..
ஐசிசி டி20 உலக கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) கிரிக்கெட் போட்டி கோலாகலமாக துவங்கி, நடைபெற்று வருகிறது. இந்த மாதம் ஜூன் 2, 2024 ஆம் தேதி முதல் துவங்கி ஜூன் 29, 2024 ஆம் தேதி வரையில் உலக கோப்பை 2024-கிற்கான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து ஒரு மாதம் முழுக்க நடைபெறும் என்று ICC அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எங்கு இலவசமாக இந்த ICC T20 World Cup 2024 லைவ் காண்பதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த பதிவு.
இந்தியாவில் எந்த சேனல் வழியாக ஐசிசி டி20 உலக கோப்பை 2024 (Indian channels list to watch ICC T20 World Cup 2024 live) கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் நேரலை காணலாம் என்பதை தெளிவாக, ஒவ்வொரு சேனல் பெயருடன் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமையாக பயன்பெற இந்த பதிவை இறுதிவரை படிக்கவும். உங்களுக்கு தெரிந்த மற்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த பதிவை ஷேர் செய்து பயன்பெற செய்யுங்கள்.

இலவச ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சேனல்கள் (Free ICC T20 World Cup 2024 Channels):
ஐபிஎல் (IPL) மோகம் சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. அதே ஜோரில், இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டி ஜூன் 2 அன்று தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறுகிறது. உலக கோப்பை (World cup) போட்டியின் ஒன்பதாவது பதிப்பு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டியில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான போட்டியானது அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெறுகிறது. கூடுதலாக, இது வழக்கத்திற்கு மாறாக மொத்தம் 20 கிரிக்கெட் அணிகளைக் கொண்ட போட்டியாக இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. முந்தைய ICC போட்டி பதிப்பில் மொத்தம் 16 அணிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கிரிக்கெட் போட்டி (T20 World cup cricket match) பிரபலமாவதை குறிக்கிறது.
டி20 2024 உலகக் கோப்பை ரவுண்ட் ராபின் (Round Robin) முறையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 கிரிக்கெட் அணிகள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 அணிகள் சூப்பர் 8 கட்டத்தை அடையும், இதில் மீண்டும் 4 அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் மோதும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் கொண்ட நாக் அவுட்களுக்குச் செல்லும்.
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை எங்கே பார்க்கலாம்?
ICC T20 உலகக் கோப்பை 2024 முக்கிய ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பார்க்கலாம். ICC T20 WC முழுவதையும் ICC.tv இல் நேரடியாகவும் இலவசமாகவும் ஒளிபரப்புகிறது. இது உலகளவில் 80-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் அதிகாரப்பூர்வ T20 வொர்ல்டு கப் ஆப்ஸ் (T20 World Cup app) வழியாக பார்க்க கிடைக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரையில்,
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (Star Sports 1)
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி (Star Sports 1 HD)
- ஸ்டார் செலக்ட் 2 (Star Sports 2)
- ஸ்டார் செலக்ட் 2 எச்டி (Star Sports 2 HD)
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 (Star Sports 3)
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் (Star Sports First)
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (Star Sports 1 Tamil)
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் எச்டி (Star Sports 1 Tamil HD)
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு (Star Sports 1 Telugu)
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு எச்டி (Star Sports 1 Telugu HD)
- மா கோல்ட் (Maa Gold)
- ஸ்டார் சுவர்ணா பிளஸ் எஸ்டி (Star Suvarna Plus SD)
- டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar)
இந்தியாவில் Disney+ Hotstar (OTT) சேனல் ICC T20 WC 2024 போட்டிக்கான ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. இதை மொபைலில் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யலாம். ஆனால் தரம் 720p வரை மட்டுமே வழங்கப்படும். ஹை-குவாலிட்டி ஸ்ட்ரீம்களுக்கான சந்தாவை நீங்கள் வாங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








