Home
Apps

Google Play Store யூசர்களுக்கு அலர்ட்! உடனே இதை பண்ணுங்க! போலி ChatGPT ஆப்ஸ் செய்த வேலை!

இந்தியாவில் போலியான சாட்ஜிபிடி (ChatGPT) ஆப்களால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) யூசர்களின் மொபைல் நம்பர், பேங்க் விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. இங்கே குறிப்பிடப்படும் ஆப்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஓப்பன் ஏஐ (OpenAI) என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் (Artificial Intelligence Company) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) சாட்பாட் சில மாதங்களில் உலகளவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது, கோடிக்கணக்கான மக்கள், நாள்தோறும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாட்ஜிபிடி ஐஓஎஸ் (iOS) ஆப் மூலம் ஆப்பிள் யூசர்களுக்கு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Google Play Store யூசர்களுக்கு அலர்ட்! போலி ChatGPT ஆப்ஸ் செய்த வேலை!

ஆனால், ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு (Android Users) இன்னும் ஆப் அறிமுகம் செய்யப்படவில்லை. இருப்பினும், பலர் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் போலியான ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப்கள் சாட்ஜிபிடியை போலலே கிட்டத்தட்ட செயல்படுகிறது. இதனால், பெரும்பாலான மக்களால் அவற்றை போலியான ஆப்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் காரணமாக அவர்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வருகின்றன. மொபைல் நம்பர், வங்கி விவரங்கள் மட்டுமே குறிவைத்து திருடும் சர்வதேச சைபர் கிரைம் கும்பல்கள், இதில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் யூனிட் 42 ( Palo Alto Networks Unit 42) என்னும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் யூசர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே, போலியான சாட்ஜிபிடி ஆப்பை யாராவது பயன்படுத்தி வந்தால், அவர்கள் உடனே பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆன்லைன் மூலமே Open Chat GPT - AI Chatbot App, AI Chatbot - Ask AI Assistant, AI Chat GBT - Open Chatbot app, AI Chat - Chatbot AI Assistant, Genie - AI Chatbot ஆகிய ஆப்களை டவுன்லோட் செய்திருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்து விடுங்கள். இந்த ஆப்கள் மூலம் ஏதாவது, எஸ்எம்எஸ், லிங்க் வந்திருந்தால், அதையும் டெலிட் செய்துவிடுங்கள்.

குறிப்பாக, இமெயில் அனுப்பப்பட்டிருந்தால், அதை ஓப்பன் செய்யாமலேயே டெலிட் செய்துவிடுங்கள். இதுபோன்ற ஆப்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் உருவாக்காப்படவில்லை என்றாலும், சைபர் கிரைம் கும்பல்கள், அவற்றில் மால்வேரை பரப்பி எளிதாக தகவல் திருட்டில் ஈடுபடுகின்றன. அதன்படி, பல்வேறு நாடுகளில் பலரது ஆண்ட்ராய்டு போன்களே ஹேக் செய்யப்பட்டு இயக்கப்பட்டுள்ளன.

சொல்லப்போனால், பல்வேறு நாடுகளை சேர்ந்த யூசர்களின் டேட்டாக்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆகவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fake ChatGPT Apps On Google Play Store Can Control Android Phones And Steal Personal Data For Scams, Google Play Store Alert
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X