அள்ளி கொடுக்கும் பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,399 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மர்ட்போனை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A15 5G Specifications): 6.5-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போன் வெளிவந்தது. மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 (MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் ஒன் யுஐ 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000mAh பேட்டரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
குறிப்பாக டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனில் உள்ளன. மேலும் ப்ளூ பிளாக், ப்ளூ மற்றும் லைட் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த போன். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








