இனி ஆப்பிள் ஐபாட் பாவம், அறிமுகம் புதிய சோனி இ இன்க் டேப்ளெட்.!

ஏற்கனவே ஆப்பிள் ஐபோன்கள் மீதான ஆர்வத்தை குறைந்துவிட்ட நிலையில் இப்பொது ஆப்பிள் ஐபாட்களையும் காலி செய்யும் வண்ணம் டேப்ளெட்களை களமிறக்க ஆரம்பித்துள்ளன.!

|

உலக அளவில் ஆப்பிள் கருவிகள் மீதான மோகம் குறைந்துகொண்டே வருவதை பார்க்க முடிகிறது, அதற் காரணனாம் என்னவென்று ஆராய்ந்தால் முதல் காரணமான - ஆப்பிள் நிறுவனத்தின் அதே பழைய பஞ்சாங்கம் பாடும் கருவிகளும், இரண்டாவது காரணமாக இதர போட்டி நிறுவங்களின் அட்டகாசமான கருவிகளும் திகழ்கிறது.

இனி ஆப்பிள் ஐபாட் பாவம், அறிமுகம் புதிய சோனி இ இன்க் டேப்ளெட்.!

அப்படியான போட்டி கருவிகள் ஏற்கனவே ஆப்பிள் ஐபோன்கள் மீதான ஆர்வத்தை குறைந்துவிட்ட நிலையில் இப்பொது ஆப்பிள் ஐபாட்களையும் காலி செய்யும் வண்ணம் டேப்ளெட்களை களமிறக்க ஆரம்பித்துள்ளன. அப்படியாக சமீபத்தில் வெளியான சோனியின் இ இன்க் டேப்ளெட் ஆனது ஆப்பிளின் ஐபாட் கருவிகளை தூக்கி சாப்பிடும் வண்ணம் உள்ளனர்.

எழுத்தாணி பேனா

எழுத்தாணி பேனா

சோனி ஜப்பான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் புதிய இ இன்க் டேப்ளெட் (DPT-RP1) ஆனது ஒரு தொடுதிரை மற்றும் ஒரு பெரிய 13.3 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் சுவாரசியமாக இந்த சோனி டேப்ளெட் உடன் காந்தவிசையால் ஒட்டிக்கொள்ளும் ஒரு எழுத்தாணி பேனா உடன் (ஸ்டைலஸ்) வருகிறது.

திரை தீர்மானம்

திரை தீர்மானம்

கைகளுக்குள் அடக்கமாக இருக்கும் என்று நிறுவனத்தால் விவரிக்கப்படும் இந்த டேப்ளெட் ஒரு1650x2220 பிக்சல்கள் என்ற திரை தீர்மானம் கொண்டுள்ளது. சுமார் 30 காகித பக்கங்களின் அடுக்கு அளவிலான தடிமன் கொண்டுள்ள இக்கருவி முந்தைய சோனி டேப்ளெட் தலைமுறை கருவிகளை விட மெலிந்தது, இலகுவானது, மற்றும் வேகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் பேப்பர்

டிஜிட்டல் பேப்பர்

இந்த புதிய சோனி டேப்ளெட் பிடிஎப் கோப்புகளை மட்டுமே படிக்க உதவும் மற்றும் இந்த டேப்ளெட் ஆனது இதர வலைத்தளங்களை மற்றும் பிற ஆவணங்களை பிடிஎப் கோப்புகளை மாற்ற உதவும் தொகுக்கப்பட்ட டிஜிட்டல் பேப்பர் பயன்பாட்டையும் பயனர்களுக்கு வழங்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

- க்வாட் கோர் மார்வெல் ஐஏபி 140 64-பிட் செயலி
- 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு
- சுமார் 10,000 கோப்புகளைச் சேமிக்க முடியும்
- அளவீட்டில் 302.6x224x5.9மிமீ மற்றும் 349 கிராம் எடையுடையது.
- வைஃபை மற்றும் ப்ளூடூத் 4.2
- 5.5 மணி நேர பயன்பட்டு சார்ஜ் நீட்டிப்பு
- 1 மாத கால ஸ்டாண்ட்-பை நேரம்

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

சோனியின் இந்த புதிய இ இன்க் டேப்ளெட் ஆனது சுமார் ரூ.47,000/- என்ற விலை நிர்ணயம் கொண்டு ஜூன் 5 முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம் மற்றும் இதன் உலகளாவிய வெளியீடு பற்றி சோனி நிறுவனத்திடம் இருந்து எந்த அறிவிப்பு இன்னமும் வரவில்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மிரட்டும் அம்சங்களுடன் மிரட்டும் விலையில் - நோக்கியா 9.!

Best Mobiles in India

Read more about:
English summary
Sony Launches a New E Ink Tablet With a 13.3-inch Display and Stylus. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X